Weight
Weight 
செய்திகள்

டயட்டில் இருந்தும் எடை குறையவில்லையா? இதை மறந்திருப்பீங்க

DIN

எல்லா டயட் முறைகளையும் பின்பற்றிவிட்டேன், எல்லா டயட்டையும் மிகக் கவனமாக தொடர்ந்து பின்பற்றியும் எடை மட்டும் குறையவேயில்லை என்று புலம்புபவர்கள் இதை ஒருவேளை மறந்திருக்கலாம்.

அதாவது, காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும், நடைப்பயிற்சி செய்ய வேண்டும். சரியான விகிதத்தில் உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று எடை விஷயத்தில் மிகக் கவனமாக இருக்கும் பலரும், மாறிவிரும் வாழ்முறை காரணமாக, நமது உடலுக்கு மிகவும் முக்கியமான, உடல் எடையில் ஒரு கேம் சேஞ்சராக இருக்கும் விஷயத்தை மட்டும் மறந்துவிடுகிறார்கள். அதுதான் நல்ல உறக்கும். போதிய உறக்கம். ஆழ்ந்த உறக்கம். எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.

உடலியக்கத்துக்கும், உடலுறுப்புகளின் இயக்கத்துக்கும், சீரான் ஹார்மோன் சுரப்பிகளுக்கும் முக்கியக் காரணியாக இருப்பது இந்த உறக்கம்தான். இது குறையும்போது அனைத்தும் பாதிக்கப்பட்டு, அவை அனைத்தும் சேர்ந்து செய்வது உடல் எடை அதிகரிப்பதைத்தான்.

எப்போதாவது, உறக்கமின்மை, போதிய உறக்கமின்மை நமது உடலின் இயக்கத்தை பாதிக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறோமா.. சரியாக உறங்காமல் கண்விழிக்கும் நாள்களில் நமது செயல்திறன் பாதிக்கப்படும். அதை வெறுமனே இரவு தூங்கவில்லை என்று ஒற்றை அல்லது இரட்டை வார்த்தைகளில் சொல்லிவிடுவோம். ஆனால், அந்த களைப்பு, மந்தநிலை எல்லாம் ஒருபக்கம் நமது உடலியக்கத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதையும் அதை ஈடுசெய்ய முடியாது என்பதையும் மறந்துவிடுகிறோம்.

இதை மாற்ற வேண்டுமானால்..

ஒரே நேரத்தில் உறங்கச் சென்று, ஒரே நேரத்தில் விழிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

உறங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு, செல்போன் பார்ப்பதை நிறுத்திவிடுங்கள்.

அதிக மற்றும் செரிமாணத்துக்கு எளிதான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

சாப்பிட்டதும் சில நடைகள் நடந்துவிட்டு பிறகு ஒரு மணி நேரத்துக்குப் பின் உறங்க வாருங்கள்.

மிக ஆழ்ந்த உறக்கம் நிச்சயம் உடல் எடையை சீராக்க உதவும் என்பதை மறக்க வேண்டாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ரூ.1.80 லட்சம் பறிமுதல்

புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும்: இபிஎஸ்

பாரமுல்லாவில் அதிக வாக்குப் பதிவு: தொகுதி மக்களுக்கு பிரதமா் பாராட்டு

நெதன்யாவுக்கு எதிராக கைது உத்தரவு: பிரான்ஸ், பெல்ஜியம் ஆதரவு

தனியாா் பள்ளிகளில் இலவச கல்வி சோ்க்கைக்கு 1.30 லட்சம் போ் பதிவு

SCROLL FOR NEXT