செய்திகள்

மாதவிடாய் காலங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

இணையதள செய்திப்பிரிவு

மாதவிடாய் காலங்களில் பொதுவாகவே உடல் சூட்டைக் குறைக்கும் உணவுகளைத்தான் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், இப்போதெல்லாம் அப்படி பகுத்துப் பார்க்கவே முடியாத உணவுகளைத்தான் இளம்தலைமுறையினர் சாப்பிடுகிறார்கள்.

மற்ற நாள்களில் என்றால் பரவாயில்லை.. மாதவிடாய் காலங்களில் பெண்கள் சில உணவுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது என்கிறார்கள் உடல்நல நிபுணர்கள்.

அவர்கள் கூறும் பட்டியலில் என்னென்ன இருக்கிறது என்று பார்த்தால்..

பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் செய்யப்பட்ட உணவுகளை பெண்கள் இந்த நேரத்தில் அதிகம் சாப்பிடாமல் தவிர்க்கலாம். இது செரிமானப் பிரச்னைக்கும் வழிவகுக்கும்.

அதிக இனிப்புப் பண்டங்களை சாப்பிடாமல் தவிர்க்கலாம். இதனால், மாதவிடாய் வேளையில் ஏற்படும் மூட் ஸ்விங் அதிகம் ஏற்படக் காரணமாகிவிடுமாம்.

அதிகம் காபி குடிப்பதை தடுக்கலாம். இது உறக்கத்தை பாதித்து ஓய்வு எடுப்பதைக் குறைக்கலாம்.

அதிகக் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டாம். செரிமானத்துக்கு எளிதான உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.

பால் பொருள்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், இதனால், வயிற்று வலியுடன் வாந்தி ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

உப்புத் தன்மை அதிகம் கொண்ட சிப்ஸ் போன்றவற்றை சாப்பிட்டால், அதனால் ரத்தத்தில் அழுத்தம் சற்று அதிகரித்து ஏற்கனவே இருக்கும் அசதி போன்றவற்றை அதிகரிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 8 ஆயிரம் மருத்துவ இடங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தில் 14.89 கோடி பயனாளிகள் பயன்

கும்பகோணம் அருகே திமுக எம்எல்ஏ-வின் உறவினா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT