எலான் மஸ்க் ஏஎஃப்பி
செய்திகள்

‘ஐபோன் தடை செய்யப்படும்’ : எலான் மஸ்க் எச்சரிப்பது ஏன்?

ஆப்பிள் சாதனங்கள் தடை: எலான் மஸ்க் எச்சரிக்கை

DIN

எலான் மஸ்க், ஆப்பிள் மற்றும் ஓபன்ஏஐ நிறுவனங்கள் ஒன்றிணைந்தால் தனது நிறுவனங்களில் ஆப்பிள் கருவிகள் தடை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் இது குறித்து, “ஆப்பிள் அதன் இயங்குதளத்தில் (ஓஎஸ்) ஓபன்ஏஐ இணைவு மேற்கொண்டால் எனது நிறுவனங்களில் ஆப்பிள் கருவிகள் தடை செய்யப்படும். இது ஏற்றுக்கொள்ள முடியாத பாதுகாப்பு மீறல்” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் செயற்கை தொழில்நுட்ப முன்னோடி ஓபன்ஏஐ உடன் இணைந்து சில வசதிகளை தனது கருவிகளில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்தது.

தனியுரிமையை முதன்மையாக கொண்ட ஏஐ இணைவு என ஆப்பிள் தெரிவிக்கிறது. பயனர்களின் தனிப்பட்ட கருவியில் செயல்படுதல் மற்றும் அவரவருக்கான தனிப்பட்ட வலைஇணைப்பு வழியாக இந்த வசதிகள் செறிவூட்டப்படும் என ஆப்பிள் குறிப்பிடுகிறது.

தன்னளவில் ஒரு செய்யறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க இயலாத ஆப்பிள் எப்படியோ ஓபன்ஏஐ- பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதி செய்யும் என்பதை கண்டறிந்திருந்து சொல்வது அபத்தம் என எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.

2015-ல் ஓபன்ஏஐ உருவாக்கத்தில் உடனிருந்த எலான் மஸ்க், ஓபன்ஏஐ ஆரம்பிக்கப்பட்ட மனிதத்துவத்துக்கு பயனளிப்பது மற்றும் இலாப நோக்கமற்றது என்கிற இலக்குகளை தற்போது மீறியுள்ளதாக வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ஓபன்ஏஐக்குப் போட்டியாக அவர் எக்ஸ்ஏஐ என்பதை உருவாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதனை மீம் ஒன்றின் மூலமாக அவர் விமர்சித்த பதிவும் தற்போது வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT