செய்திகள்

அழைப்புகளுக்கு உங்கள் குரலில் பதிலளிக்கும் ஏஐ: ட்ரூகாலரின் புதிய வசதி!

ட்ரூகாலரில் மைக்ரோசாஃப்ட் ஏஐ: உங்கள் குரலில் அழைப்புகளுக்கு பதிலளிக்கிறது!

DIN

அலைபேசியில் வரும் அழைப்புகளுக்கு நம் குரலில் ஏஐ பதிலளித்தால் எப்படி இருக்கும்?

இதனை சாத்தியப்படுத்தியுள்ளது ட்ரூகாலர் செயலி. மைக்ரோசாஃப்ட் உடன் இணைந்து தனிநபர் குரல் தொழில்நுட்பத்தை தனது செயலியில் பயன்படுத்தியுள்ளது.

மைக்ரோசாஃப்ட்டின் அசூர் ஏஐ ஸ்பீச், பயனர்களின் குரல்களை எண்மயாக்கி (டிஜிட்டல் வெர்சன்) ஏஐ உதவியாளருக்கு அளிக்கும்.

2022 முதல் ட்ரூகாலரில் பல்வேறு வகையிலான ஏஐ வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அழைப்புகளை எடுக்கும், குறுஞ்செய்திகளுக்கு தானாகவே பதிலளிக்கும், அழைப்புகளை பதிவு செய்யும் இப்படியான வசதிகளின் வரிசையில் இந்த புதிய வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது குறித்து, “நமக்கு வரும் அழைப்புகளுக்கு நம் குரலிலேயே செய்யறிவு (ஏஐ அசிஸ்டெண்ட்) உதவியாளர் பதிலளிக்கும்” என ட்ரூகாலரின் தயாரிப்பு இயக்குநரும் பொது மேலாளருமான ரபேல் மிமோன் தெரிவித்துள்ளார்.

அழைக்கும் நபர்களுக்கு குரல் பரீட்சயத்தை மட்டுமில்லாமல் செய்யறிவின் திறனையும் இந்த வசதி காண்பிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

மைக்ரோசாஃப்ட் தனிநபர் குரல் செயலி தொழில்நுட்பம், நாம் ட்ரூகாலர் செயலியை வைத்திருந்தால், நமக்கு வரும் அழைப்புக்கு நம் குரலிலேயே ஏஐ பதிலளிக்கும் வசதியை கொடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த வசதி படிப்படியாக உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

SCROLL FOR NEXT