மைக்ரோசாஃப்ட் - கோப்புப் படம் IANS
உலகம்

குட்நியூஸ்! மைக்ரோசாஃப்ட் நியமித்த பொறியியல் தர நிர்ணய தலைவர்! முக்கியத்துவம் பெறுவது ஏன்?

மைக்ரோசாஃப்ட் நியமித்த பொறியியல் தர நிர்ணய தலைவர் பதவி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

மென்பொருள் துறையில் கோலோச்சி வரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், புதிதாக பொறியியல் தர நிர்ணய தலைவர் என்ற பதவியை உருவாக்கி அதில் சார்லி பெல் என்பவரை நியமித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பணியாளர்களுக்கான இணையப்பக்கத்தில் இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் நிர்வாகி நாதெல்லா, தங்கள் நிறுவனத்தின் 30 சதவீத கோட்-களை செய்யறிவுதான் எழுதிவருகிறது என்று அறிவித்த ஓராண்டுக்குள், புதிதாக ஒரு தர நிர்ணய தலைவர் பதவி உருவாக்கப்பட்டிருப்பது தனி கவனம் பெற்றுள்ளது.

இந்த செய்திக் குறிப்பில், திடீரென மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு தர நிர்ணய அதிகாரியின் தேவை ஏன் ஏற்பட்டது என்பது குறித்த கேள்விக்கு பதில் மறுக்கப்பட்டுள்ளது.

செய்யறிவால் எழுதப்படும் கோடிங்

கடந்த 2025ஆம் ஆண்டு நாதெல்லா - மெட்டா தலைமை செயல் நிர்வாகி மார்க் ஸக்கர்பெர்க் இணைந்து உரையாடியபோது, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 20 - 30 சதவிகித கோடிங் பணிகளை செய்யறிவே மேற்கொள்கிறது என்றார். இது 2030ஆம் ஆண்டில் 95 சதவிகிதமாக மாறும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மற்றொரு நிர்வாகி கெவின் ஸ்காட் கூறியிருந்தார்.

ஆனால் வேகமும், அளவும் தரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அண்மையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எழுதிய சில கோடிங் மீண்டும் எழுதப்பட்டது அல்லது நீக்கம் செய்யப்பட்டதாக சில ஆராய்ச்சி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதுபோல விண்டோஸ் 11 இயங்கு தளமும் தற்போது சிக்கலில் உள்ளது. 2026ஆம் ஆண்டு ஜனவரியில் வணிக நிறுவன கணினிகளில் பாதுகாப்பு டூல்களின் அப்டேட்கள் செய்ய முடியாமல் போனது, மேலும், சில முக்கிய நிறுவனங்களின் செயல்பாடுகள் முடங்கின என்பதையும் இங்கே நினைவுகூருகிறார்கள்.

ஃபைல் எக்ஸ்ப்லோரர் இன்னமும் மந்தமாக உள்ளது, டார்க் மோட் பிரச்னையை சரி செய்ய மைக்ரோசாஃப்ட் எடுத்த முயற்சி மேலும் சிக்கலை அதிகரித்து அது இன்னமும் தீர்ந்தபாடில்லை. எனவே, அந்த நிறுவனம், தன்னுடைய பொறியாளர்களிடம், இந்த பிரச்னைகளை சரி செய்ய முற்றிலும் புதிய டூல்களை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. இந்த பணிகள் கடந்த சில மாதங்களாக தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது என்கின்றன தகவலறிந்த வட்டாரங்கள்.

இந்த நிலையில்தான், பொறியியல் தர நிர்ணய தலைவர் பதவி ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டு, அதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது கோடிங் நிபுணர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக மாறியிருக்கிறது என்று கூறப்படுகிறது.

டெவலப்பர்களால், மனிதர்கள் எழுதிய கோடிங்கில் பக்குகளை கண்டறிவதைப் போல செய்யறிவு எழுதிய கோடிங்கில் பக்குகளை கண்டறிய முடிவதில்லை என்றும், 40 சதவிகித பக்குகள் கவனிக்கப்படாமல் விடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தது போல, மைக்ரோசாஃப்டின் செய்யறிவு செயல்படவில்லை என்றும், இந்த ஆண்டு அந்த நிறுவனத்தின் பங்குகள் சரிவை அடைந்திருப்பதும் மற்றொருபக்கம் தனிக்கவனம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதலர் நாளில் மறுவெளியீடாகும் திரைப்படங்கள்!

நரவணேவை நம்ப மாட்டீர்களா? பொய் கூறுவாரா? ராகுல் கேள்வி!

மகாராஷ்டிர துணை முதல்வராகப் பொறுப்பேற்றார் சுநேத்ரா பவார்!

பல குடும்பங்களின் தலையெழுத்தை திமுக அரசு மாற்றியுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை! டிரம்ப்பை சந்திக்க அமெரிக்கா செல்கிறார் நெதன்யாகு!

SCROLL FOR NEXT