ஸ்பெஷல்

கண்களுக்கு விருந்தளிக்கும் கொலு பொம்மைக் கண்காட்சி!

களிமண், காகிதக்கூழ், பளிங்குத்தூள், மரம், கொல்கத்தா களிமண்ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள்...

ஸ்ரீதேவி குமரேசன

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தமிழகத்தில் உள்ள  32 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திடும் நோக்கிலும், விற்பனை வாய்ப்பினை மேம்படுத்திடும் வகையிலும், சென்னையில் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் மாநில அளவிலான விற்பனை கண்காட்சிகள் மூலமாக பல்வேறு விற்பனை வாய்ப்புகளை மகளிர் குழுக்களுக்கு ஏற்படுத்தி தருகிறது. அந்த வகையில், நவராத்திரியை முன்னிட்டு "நவராத்திரி 2016' க்கான கொலு பொம்மைகள் விற்பனை மற்றும் கண்காட்சி சென்னை, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தொடங்கியுள்ளது.

இக்கண்காட்சியில் களிமண், காகிதக்கூழ், பளிங்குத்தூள், மரம், கொல்கத்தா களிமண்ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்ணைக் கவரும் அழகிய வண்ண வண்ண பொம்மைகளின் அணிவகுப்பை பார்த்து ரசிக்க கண்கோடி வேண்டும். 

இது குறித்து காஞ்சிபுரம் "மரகதம் மகளிர் குழு'வின் தலைவி ஜெயந்தி கூறுகையில்,
 "ஒவ்வொரு ஆண்டு நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் போதும் புதிய தீம்களை உருவாக்கி புது பொம்மைகளை வடிவமைப்போம். அந்த வகையில், இந்த ஆண்டு   காஞ்சிபுரம் பெருமாள் பங்குனி உத்திர சேவை, ஜல்லிக்கட்டு, மாயாபஜார் கடோத்கஜன், சொர்க்கவாசல் பொம்மைகளை உருவாக்கியிருக்கிறோம்.  இவைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. அதிலும் அங்கே இடைத்தரகர்கள் யாரும் இல்லாமல் நேரடி விற்பனை செய்யும்போது எங்கள் உழைப்பிற்கு ஏற்ற வருமானமும் கிடைக்கிறது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT