ஸ்பெஷல்

‘ஞாபகங்களை மீட்டெடுக்க உதவிய தினமணி.காமுக்கு நன்றி!’ தேசிய கையெழுத்து தின வாசகர் கடிதம் - 6

திருச்சி, லால்குடியைச் சேர்ந்த தினமணி இணையதள வாசகர் மாதவன் அவர்கள் தேசிய கையெழுத்து தினத்துக்காக தனது சொந்தக் கையெழுத்தில் பகிர்ந்து கொண்ட ஒரு உணர்வுப்பூர்மான வாழ்வனுபவம் இது.

கார்த்திகா வாசுதேவன்

திருச்சி, லால்குடியைச் சேர்ந்த தினமணி இணையதள வாசகர் மாதவன் அவர்கள் தேசிய கையெழுத்து தினத்துக்காக தனது சொந்தக் கையெழுத்தில் பகிர்ந்து கொண்ட ஒரு உணர்வுப்பூர்மான வாழ்வனுபவம் இது. இந்தக் கடிதம் எழுதியதின் வாயிலாக அவர் இழந்து விட்ட தனது பூர்வீக வீட்டின் நினைவுகளை மீட்டெடுக்க முயல்கிறார். வாழ்வியல் நிர்பந்தங்களுக்காக சொத்துக்கள் கை மாறலாம், ஆனால் நினைவில் மாத்திரம் அவை என்றென்றும் நம்முடையவையே என்ற எண்ணம் நீங்குவதேயில்லை. 

கீதாஉபதேசத்தில் கிருஷ்ணர் என்ன சொன்னார்?! நேற்று வேறொருவருடையதாக இருந்த ஒன்று இன்று நம்முடையதாகிறது... நாளை அது மற்றொருவருடையதாகவும் ஆகக் கூடும். அது காலச்சக்கரத்தைப் போன்றே சுழற்சி முறையில் கீழிருப்பவர்களை மேலேற்றி, மேலிருப்பவர்களை கீழே தள்ளி பகவான் ஆடும் ஒரு பரமபத விளையாட்டு. அந்த விளையாட்டில் எந்தப் பொருளும் யாருக்கும் சொந்தமில்லை என்பது தெய்வ வாக்காக இருக்கலாம். ஆனால் லெளகீகத்தில் நாம் ஒரு பொருளை விலை கொடுத்துப் பெற்று அதன் மீது நமது பந்தங்களையும், பாசத்தையும் உணர்வுப்பூர்வமாக வளர்த்துக் கொண்டோமென்றால் காலத்துக்கும் அது நமக்குச் சொந்தமானது, உரிமையானது என்ற எண்ணத்தை மட்டும் மாற்றிக் கொள்ளவே முடிவதில்லை. இப்படியான உணர்வுகளே மனிதனை உயிர்ப்புடன் வாழ வைக்கின்றன. இவற்றை முன்வைத்தே நமது மகாகாவியங்கள் இயற்றப்பட்டுள்ளன. 

மாதவன் அவர்களைப் போலவே சொந்த வீடு, சொந்த ஊர், படித்த பள்ளி, கல்லூரி, முதன் முதலாக வாங்கிய வீடு, வாகனம் குறித்த உரிமை நினைவுகள் இல்லாதோர் யார்?! அவை இன்று வேறு யாருக்கோ உரியனவாக ஆகிவிட்டார் போலத் தோற்ற மயக்கமிருந்தாலும் நம் மனதில் அவை என்றென்றும் நம்முடையவையே!

A.மாதவன் கடிதம்...

தேசிய கையெழுத்து தினத்துக்காக முயற்சி எடுத்து சொந்தக் கையெழுத்தில் கடிதம் எழுதி அனுப்பிய வாசகர் A. மாதவன் அவர்களுக்கு நன்றி!

டிஸ்கி:  புகைப்படத்தில் உள்ள வீடு உதாரணத்திற்குப் பயன்படுத்தப் பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

SCROLL FOR NEXT