டொமெட்டோ கெச்சப் பாக்கெட்டுகள் அதிகமாக மீந்து விட்டால் என்ன செய்வது?
எப்போதோ வாங்கி வைத்த டொமொட்டோ கெச்சப் பாட்டில் சீக்கிரத்தில் தீர மாட்டேன் என்கிறதா? கவலை வேண்டாம்.
அடிக்கடி பீட்ஸா, பர்கர் என்று ஆர்டர் செய்து உண்பவர்களா நீங்கள்? அப்படி ஆர்டர் செய்யும் போது கூடுதலாகக் கிடைத்த கெச்சப் பாக்கெட்டுகள் டைனிங் டேபிள் டிராயரை அடைத்துக் கொண்டு கிடக்கிறதா? அல்லது எப்போதோ வாங்கி வைத்த டொமொட்டோ கெச்சப் பாட்டில் சீக்கிரத்தில் தீர மாட்டேன் என்கிறதா? கவலை வேண்டாம். டொமொட்டோ கெச்சப் என்பது ஜங்க் ஃபுட்டுக்கு தொட்டுக் கொள்ள மட்டுமல்ல அதை வைத்துப் பிரமாதமாக வேறொரு உபயோகமான வேலையும் செய்து முடிக்க முடியும்.
வெள்ளி அல்லது கல் வெள்ளியில் தயாரிக்கப்பட்ட ஜாடிகள், ஷோ கேஸ் அலங்காரப் பொருட்கள், பரிமாறும் தட்டுகள், டம்ளர்கள் என எல்லாவற்றையும் இந்த மீந்து போன டொமெட்டோ கெச்சப்புகளைக் கொண்டு சுத்தம் செய்ய முடியும். துருப்பிடித்த அல்லது நிறம் மாறிய மேற்கண்ட பொருட்களின் மீது மீந்து போன டொமேட்டோ கெச்சப்புகளை அப்ளை செய்து 5 முதல் 10 நிமிடங்கள் ஊற விட்டுப் பிறகு ஒரு டிஸ்யூ பேப்பர் கொண்டு அழுத்தித் துடைத்தால் போதும் துருவெல்லாம் காணாமல் போய் பொருட்கள் பளிச்சென்று ஆகி விடும்.
Related Article
டூத்பேஸ்ட் மேஜிக்... பல் துலக்க மட்டுமல்ல, இப்படியும் பயன்படுத்தலாம்!
Advertisement
கோவையில் மத்தியதர வர்க்க இல்லத்தரசிகளை குஷிப்படுத்தி வரும் ரூ 2,500 மலிவு விலை வாஷிங் மெஷின்!
வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி?
அக்ரஹாரம் இல்லை... இது அக்கரகாரம் எனும் மூலிகைச் செடி!