ஸ்பெஷல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொய்யாப்பழம்!

தினமணி

மற்ற பழங்களைவிட மலிவாகக் கிடைக்கும் கொய்யாப்பழத்தில் எண்ணற்ற சத்துகள் நிறைந்துள்ளன. ஆரஞ்சை விட கொய்யாப்பழத்தில் நான்கு மடங்கு வைட்டமின் சி உள்ளது. 

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது கொய்யாப் பழம். நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது. 

கொய்யாப்பழம் செரிமான அமைப்புக்கு சிறந்தது. நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாக இருப்பதால் இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது. 

வைட்டமின் சி அதிகம் இருப்பதால் உயர் ரத்த அழுத்தத்திற்கு எதிராகப் போராட உதவுகிறது. நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கும் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகவும் செயல்படுகிறது. இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

கொய்யா கலோரிகள் குறைந்த பழம். அதேநேரத்தில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தது. தினமும் உணவில் ஏதேனும் ஒரு நேரத்தில் சேர்த்துக்கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவும். 

பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகளைக் கொண்டிருப்பதால் முகப்பருக்களை குறைக்க உதவுகிறது. இது சருமத்தின் சுருக்கங்களை நீக்குகிறது. இதனால் இளமையாக இருக்கலாம். 

கொய்யா பழச்சாறு பார்வையை மேம்படுத்தும். வைட்டமின் ஏ நிறைந்து இருப்பதால் கண் சம்பந்தமான மற்ற பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும். 

மேலும் இதில் மெக்னீசியம் உள்ளதால் உடலின் தசைகளை தளர்த்தி மன அழுத்தத்தை போக்க உதவுகிறது. 

ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை சீராக்குகிறது. வயிற்றில் கழிவுகள் தேங்கவிடாமல் தடுக்கிறது.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் கொய்யாவுக்கு முக்கிய பங்கு உண்டு. நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு கொய்யா சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். 

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதயச் சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றன. 

கொய்யாவின் தோலில்தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கிச் சாப்பிடக்கூடாது. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT