dotcom
ஸ்பெஷல்

தயிர் சாப்பிட்டால் சளி ஏற்படுமா? - நம்பிக்கையும் உண்மையும்!

சளி, இருமல் குறித்த தவறான நம்பிக்கைளுக்கு பதில் அளிக்கிறார் புவனேஸ்வரம் கலிங்கா மருத்துவமனையின் குழந்தைகள் நலன் மருத்துவர் டாக்டர் அங்கிதா பகத்.

DIN

தொகுப்பு: ஹேமந்த் குமார் ரௌத்

சளி, இருமல் தொற்றும் தன்மை கொண்டதா? தயிர் சாப்பிட்டால் சளி, இருமல் ஏற்படுமா? சளி, இருமல் அடிக்கடி ஏற்பட்டால் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறதா?

சளி, இருமல் குறித்த இதுபோன்ற தவறான நம்பிக்கைளுக்கு பதில் அளிக்கிறார் புவனேஸ்வரம் கலிங்கா மருத்துவமனையின் குழந்தைகள் நலன் மருத்துவர் டாக்டர் அங்கிதா பகத்.

அனைத்துவிதமான சளி, இருமலுக்கும் நோயெதிர்ப்பு மருந்துகள் தேவை.

பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுகளுக்கு நோயெதிர்ப்பு மருந்துகள் தேவை. ஆனால், பெரும்பாலான சளி, இருமல் வைரஸால் ஏற்படுபவை. நோயெதிர்ப்பு மருந்துகளை அடிக்கடி பயன்படுத்துவது அல்லது தவறாகப் பயன்படுத்துவது உடல்நிலையைப் பாதிக்கும்.

தயிர் உள்ளிட்ட பால் பொருள்கள் சாப்பிடுவதால் சளி ஏற்படும்.

உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அதற்கு பாக்டீரியா, வைரஸ்தான் காரணமாக இருக்கும். தயிரில் நிறைய சத்துகள் இருப்பதால் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. எனவே, தயிர் சாப்பிடுவதால் சளி ஏற்படாது.

சளி, இருமல் டானிக் விரைந்து குணப்படுத்தும்.

மாத்திரைகளைப் போன்று திரவ மருந்துகளும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவைதான். குறிப்பாக குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அவை சளி, இருமலுக்கான அறிகுறிகளை கட்டுப்படுத்தும், ஆனால் மயக்க மருந்துக்கான விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்வது நல்லது.

சளி, இருமல் அடிக்கடி ஏற்பட்டால் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.

குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, இருமல் ஏற்பட்டால் அழற்சிதான் காரணமாக இருக்கும். நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்று அர்த்தமல்ல.

சளி போன்று அனைத்து வகையான இருமலும் தொற்றக்கூடியது.

வைரஸ், பாக்டீரியாவால் ஏற்படும் இருமல் தொற்றக்கூடியது. ஒவ்வாமை, ஆஸ்துமா, சுவாசக் கோளாறுகள் ஆகியவற்றால் இருமல் ஏற்படும்.

காய்ச்சல் தடுப்பூசிகள் தொற்றை ஏற்படுத்தும்.

மருத்துவர்கள் பரிந்துரைப்படி குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போட வேண்டும். இது வைரஸ்களை அழிக்கும். இதனால் தொற்று ஏற்படாது.

சளி இருக்கும்போது குழந்தைகள் பள்ளிக்குச் செல்லலாம்

வைரஸால் ஏற்படும் சளி போன்றவை தொற்றும் தன்மை கொண்டவை, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும். எனவே வீட்டில் இருப்பதே நல்லது.

தமிழில்: எம். முத்துமாரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT