ஹேமந்த் குமார் ரௌத்
கர்ப்ப காலத்தில் பற்களின் ஆரோக்கியம் குறித்த பல்வேறு தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் புவனேஸ்வரம் எய்ம்ஸ் மருத்துவமனையின் பல் மருத்துவத் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் அசோக் குமார் ஜெனா.
கர்ப்பம், பற்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்காது
கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், வாய் ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமின்றி, அதிகரிக்கும். ஏற்கெனவே ஈறு நோய்கள் இருந்தால் அதனை தீவிரப்படுத்தும். பசியின்மை, சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும். மேலும், குமட்டல் இருந்தால் பற்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
கர்ப்பமானால் பல்லை இழக்க நேரிடும்
கர்ப்ப காலத்தில் பல் விழுந்துவிடும் என்பது இயல்பானது அல்ல. கர்ப்ப காலத்தில் பல் விழுந்தால் ஏற்கெனவே பல் தொடர்பான பிரச்னைகள் இருக்க வாய்ப்புள்ளது. கர்ப்பத்தினால் பல் விழுவதற்கு வாய்ப்பு என்பது இல்லை.
கர்ப்ப காலத்தில் பல் சிகிச்சை, கருவின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்
கர்ப்ப காலத்தில் பல் சிகிச்சை மேற்கொண்டால் கருவில் உள்ள குழந்தையை பாதிக்காது. மாறாக, பல் சிகிச்சை மூலமாக தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவது கர்ப்ப காலத்தில் வாய் சுகாதாரத்தைப் பேண உதவும். கர்ப்பத்தின் 4-6 மாத காலம்(இரண்டாவது ட்ரைமெஸ்டர்) பற்கள் சிகிச்சைக்கு பாதுகாப்பானது.
கர்ப்பம், பற்களில் இருந்து கால்சியத்தை வெளியேற்றுகிறது, பற்சிதைவு அபாயத்தை அதிகரிக்கிறது
கருவில் உள்ள குழந்தையின் பற்கள், எலும்புகளின் வளர்ச்சிக்கு தாயின் உணவுதான் கால்சியத்தின் முக்கிய ஆதாரம். தாய் எடுத்துக்கொள்ளும் உணவில் கால்சியம் போதுமானதாக இல்லாவிட்டால், தாயின் எலும்புகளில் கால்சியம் அளவு குறையலாம். பற்களில் இருந்து குறையாது.
பற்களில் எடுக்கப்படும் எக்ஸ்-ரே தீங்கு விளைவிக்கும்
கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் பல் எக்ஸ்-ரே பாதுகாப்பானது, ஆனால் தேவைப்பட்டால் மட்டுமே எடுக்க வேண்டும்.
தமிழில்: எம். முத்துமாரி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.