தொழில்நுட்பம்

100 கோடி பயனாளர்களைக் கடந்த டெலிகிராம் செயலி!

தினமணி

உலகில் அதிகப் பயனாளர்களைக் கொண்ட டெலிகிராம் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இதுவரை 100 கோடி பேர் தரவிறக்கம் செய்திருக்கிறார்கள்.

வாட்ஸ் ஆப் , ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் கடந்த(அக்-4) இரவு உலகம் முழுவதும் 6 மணி நேரத்திற்கு மேல் செயல்படாமல் முடங்கியதால் டெலிகிராம் செயலியில் புதிதாக 7 கோடி புதிய பயனர்கள் இணைந்திருக்கிறார்கள். மேலும் சில சிக்கல்கள் உருவானதைத் தொடர்ந்து அடுத்தடுத்து அதிகப்படியான வாடிக்கையாளர்கள் டெலிகிராமை தரவிறக்கம் செய்யத் தொடங்கினர்.

இதுகுறித்து டெலிகிராம் தலைமைச் செயலர் பாவெல் துரோவ் ‘2021-ஆம் ஆண்டு முதல் மாதம் 50 கோடி பேர் டெலிகிராம் சேவையைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். கடந்த அக்-4 ஆம் தேதி வாட்ஸ் ஆப் , ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கியதால் டெலிகிராம் செயலியில் புதிதாக 7 கோடி பயனாளர்கள் இணைந்ததுடன் செயலியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் அதிகரித்தது’ எனத் தெரிவித்தார். 

மேலும் அவர் ’தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இதுவரை டெலிகிராம் செயலியை தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 100 கோடியைக் கடந்திருப்பதாகவும் , அனைத்துப் பயனாளர்களுக்கும் சேவையை வழங்க நிறுவனம் காத்திருக்கிறது எனக் கூறியதோடு அத்தனை தரவிறக்கங்கள் நிகழந்தாலும் செயலியை உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் நிகழவில்லை’ எனத் தெரிவித்திருக்கிறார்.

இருப்பினும் டெலிகிராம் செயலில் தற்போது புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருப்பது அதன் பயன்பாட்டு சதவீதத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக புதிய எமோஜிகள் , செய்திகளைப் பரிமாறும் இருவரின் திரை பின்பக்க படங்களை ஒரே மாதிரியாக வைத்துக் கொள்வது போன்ற வசதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் துண்டத்துவிளை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா: இன்று தொடக்கம்

டெங்கு விழிப்புணா்வு தினம் கடைப்பிடிப்பு

மழை விளையாடியது: பிளே-ஆஃபில் ஹைதராபாத்

அரையிறுதியில் ஸ்வெரெவ்; ஹா்காக்ஸ் தோல்வி

காலிறுதியில் மெய்ராபா, சாத்விக்/சிராக் இணை

SCROLL FOR NEXT