முகப்பு
உள்ளாட்சித் தேர்தல் 2019

ஈரோட்டில் வெற்றிலைப் பாக்கு வைத்துப் பிரசாரம்: பஜ்ஜி சுட்டு கை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பு

காங்கிரஸ் கட்சியின் சார்பில் இறுதி கட்ட பிரசாரம் ஊத்துக்குளி பகுதியில் பொதுமக்களுக்கு  வெற்றிலைப் பாக்கு வைத்து நடைபெற்றது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:41 PM
பகிர்:

காங்கிரஸ் கட்சியின் சார்பில் இறுதி கட்ட பிரசாரம் ஊத்துக்குளி பகுதியில் பொதுமக்களுக்கு  வெற்றிலைப் பாக்கு வைத்து நடைபெற்றது.

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் 5-ஆவது வார்டு பகுதியில் போட்டியிடும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் செந்தில் குமார் அவர்களை ஆதரித்து ஊத்துக்குளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் பிரசாரம் செய்தார். 

அப்போது அவர் ஊத்துக்குளி பகுதியில் பொதுமக்களுக்கு வெற்றிலைப் பாக்கு வைத்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மேலும் அங்கு இருந்தவர்களை கலகலப்பூட்டும் விதத்தில் போண்டா, பஜ்ஜி கடையில் போண்டா சுட்டும் பொதுமக்கள் மத்தியில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

வேட்பாளர் செந்தில் குமார் உடன் ஊத்துக்குளி ஒன்றிய பகுதிகளான கஸ்தூரி பாளையம், கணக்கம்பாளையம், காரதெரு, சாம்ராஜ் பாளையம், செல்வபுரம், பல்லகவுண்டன்பாளையம், மேண்டர்கரை, முகாசி பல்லகவுண்டன்பாளையம், ஊத்துக்குளி, தேனீஸ்வரர் ஈஸ்வரன்பாளையம், புதுப்பாளையம், அருகம்பாளையம், முல்லை நாயக்கனூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் காங்கிரஸ் சின்னமான கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும், காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகளும் இருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →