உள்ளாட்சித் தேர்தல் 2019

திருப்பூரில் ஒரே பதவிக்கு ஒரே குடும்பத்தில் 3 பேர் போட்டி

DIN

திருப்பூர்: திருப்பூர் அருகே சடையபாளையம் கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் போட்டியிடுகின்றனர்.

குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட சடையபாளையம் கிராம ஊராட்சியில் தலைவர் பதவிக்கு அண்ணன், தம்பி, அண்ணன் மனைவி உள்ளிட்ட 6 பேர் போட்டியிடுகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியத்தில் உள்ள சடையபாளையம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட 10 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் கடந்த முறை ஊராட்சி தலைவராக இருந்த செம்பேகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி, அவரின் மனைவி லட்சுமி, மகன் சிலம்பரசன், பெரியசாமியின் தம்பி ஈஸ்வரன், அவரின் மனைவி செல்வராணி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் அடங்குவர்.

வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு பின்னர் பெரியசாமியின் மகன் சிலம்பரசன், பெரியசாமியின் தம்பி ஈஸ்வரன் மனைவி செல்வராணி உள்ளிட்ட4பேர் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்ற நிலையில் தற்போது அண்ணன், தம்பி, அண்ணன் மனைவி உள்ளிட்ட 6 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் லட்சுமியும் ஏற்கனவே ஊராட்சி தலைவராக இருந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT