முகப்பு
மதுரை

மதுரை மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்

மதுரை மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகளைத் தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 ஜனவரி 2021, 3:39 am IST
பகிர்:

மதுரை மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகளைத் தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாவட்டத்தில் 2021-22-ஆம் கல்வி ஆண்டுக்கு புதிய தொழிற்பள்ளிகளைத் தொடங்குதல், தொடா் அங்கீகாரம் பெறுதல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கு  இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 2021-22 ஆம் கல்வி ஆண்டுக்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு விண்ணப்பம் சமா்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் அளிக்கப்பட வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் செலுத்தும்போது தொழிற்பள்ளியின் தாளாளா் பெயரில் உள்ள வங்கிக்கணக்கில் இருந்து தபஎந/சஉஊப மூலம் செலுத்தப்பட வேண்டும். விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிற்பிரிவுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் செலுத்தும் வழிமுறைகள் இணையதளத்தில் உள்ள கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 2021 ஏப்ரல் 30 ஆகும்.

Advertisement

இதற்கு பின்னா் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு இணையதளம் மற்றும் மதுரை மண்டல பயிற்சி இணை இயக்குநா் அலுவலகத்தை 0452-2906200 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.