திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடன் கமல்ஹாசன் சந்திப்பு!
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்துள்ளது குறித்து...
தமிழக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, முதல்முறையாக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் இன்று (மே 15) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினையும் கமல்ஹாசன் சந்தித்து உரையாடியுள்ளார்.
Advertisement
Advertisement
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் வெளிநாட்டில் இருந்தேன். தாயகம் திரும்பியதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், இனிய நண்பருமான மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினையும் சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவர்களின் இல்லத்தில் நேரில் சந்தித்து உரையாடினேன்” எனக் கூறியுள்ளார்.
Kamal Haasan met with former Tamil Nadu Chief Minister M.K. Stalin in person and held discussions.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.