தமிழகத்தின் பெருமையை அற்ப அரசியலுக்காக சிதைத்த தவெக அரசு: மு.க. ஸ்டாலின்
மத்திய - மாநில உறவுகளை ஆராயும் குழுவை கலைத்த விவகாரம் தொடர்பாக தவெக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மத்திய - மாநில உறவுகளை ஆராயும் குழுவை கலைத்த விவகாரம் தொடர்பாக தவெக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மத்திய - மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் முந்தைய திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை தவெக அரசு ரத்து செய்தது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் குறிப்பாக திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “மாநில உரிமைகள் என்றாலே தமிழ்நாடு என்று இந்திய அளவில் நமக்கு இருக்கும் பெருமையை அற்ப அரசியலுக்காகச் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு!
Advertisement
Advertisement
இந்தியா முழுவதிலும் இருந்து அறிவார்ந்த ஆன்றோர்கள் தெரிவித்து வரும் கண்டனங்களே த.வெ.க.வின் இழிவான அரசியலை அம்பலப்படுத்திவிட்டன.
நீதியரசர் குரியன் ஜோசப் அவர்களும், திரு. அஷோக் வர்தன் ஷெட்டி அவர்களும், பேரா. மு. நாகநாதன் அவர்களும் மேற்கொண்ட பணியில் யாரும் குறைகாணவும் முடியாது, அதனை வேறு எவரைக் கொண்டும் நிறைவுசெய்யவும் முடியாது.
இத்தகைய சிறப்பான பெருமக்கள் கொண்ட குழுவை அமைத்த பெருமை எனக்கு எப்போதும் இருக்கும், இதனைப் பாதியில் கலைத்த சிறுமைதான் த.வெ.க. அரசின் மேல் காலத்துக்கும் நிலைக்கும்!” என்று தெரிவித்துள்ளார்.