இசை

பஞ்ச மரபு

தினமணி

இரண்டாவது இசை இயல் விளக்கம் திருவையாறு இசைக் கல்லூரியில் முதல்வராகப் பல வருடங்கள் சேவை செய்த முனைவர் ஆர். கெüசல்யாவின் "பஞ்சமரபு' எனும் இசைத்தமிழ் நூல் பற்றியது. இதுஒரு மணி நேரத்தில் விளக்கக்கூடிய விஷயம் இல்லை.

முதன்முதலில் தெய்வசிகாமணி கெüண்டரால் ஒரு ஓலைசுவடியும், உரை நூலும் கண்டறியப்பட்டு அவரால் பதிக்கப்பட்டது என்று கூறினார். இந்த மரபு நூல் முதல் திருமாறன் என்ற மன்னர் காலத்ததாக இருக்க வேண்டும் என்றார். இடைச் சங்கத்தின் கடைப் பகுதியோ அல்லது கடைச்சங்க காலத்தைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்றார்.

ஐந்து பகுதிகளைக் கொண்ட இந்நூலுக்கு பஞ்ச மரபு என்று பெயர் என்றும், இது தோல், துளை, நரம்பு, கஞ்சம், மிடறு என்ற ஐந்து விஷயங்களைப் பற்றி விவரிப்பதாகக் குறிப்பிட்டார். 7 ஸ்வரங்களின் தமிழ்ப் பெயர்களான குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற பெயர்களைக் குறிப்பிட்டார். இதைத் தவிர 103 பண்கள் அதில் பெரும் பண்கள் (சம்பூர்ணம்) 17, பண்ணியல் (ஷாடவம்) 70, திறம் (ஒüடவம்) 12, திறத்திறம் (சுவராந்தரம்) 4 என்பதை விளக்கினார். 7 பாலைகளையும், ஒவ்வொரு பாலையின் கீழ் எவ்வளவு பண்கள் வருகின்றன என்றும் குறிப்பிட்டார். இசைப் புணர்ப்பு என்ற இசை அமைத்தலுக்கு தேவையானவை, மங்கலப் பண்கள். இவற்றைப் பற்றியும் குறிப்பிட்டார் கெüசல்யா.

தகவல் உதவி:

சந்திரிகா ராஜாராம், ஜெயஸ்ரீ, சுவாதி, ஹம்சினி,

உமா சரஸ், ராஜ்கண்ணன்

படங்கள்: ராகி - விஜி -ரவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோத்துப்பாறை அணை நிரம்பியது

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ முகாம்

திண்டுக்கல் அருகே 2 போலி மருத்துவா்கள் கைது

குரூப் 4 தோ்வு: திண்டுக்கல்லில் 59,615 போ் எழுதுகின்றனா்

ஆத்தூா் தொகுதியில் சாலைகள் அளவிடும் பணி

SCROLL FOR NEXT