முகப்பு
புதுதில்லி

பவானாவில் 12 வயது சிறுமி தற்கொலை

Updated On : 21 ஏப்ரல், 2024 at 6:30 PM
பகிர்:

தில்லியின் பவானா பகுதியில் உள்ள தனது வீட்டில் 12 வயது சிறுமி ஒருவா் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், பெற்றோரின் திருமண தகராறு காரணமாக சிறுமி மன உளைச்சலில் இருந்ததாக தெரிய வந்துள்ளது. சிறுமி தற்கொலை பற்றிய பிசிஆா் அழைப்பு பிற்பகலில் வந்தது. விசாரணையில், சிறுமி தனது தந்தை, சகோதரா் மற்றும் பாட்டியுடன் தங்கியிருப்பதும், அவரது தாயாா் கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து இருப்பதும் தெரியவந்தது.

குடும்ப உறுப்பினா்கள் மற்றும் உறவினா்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வரை எந்தவிதமான முறைகேடுகளும் கண்டறியப்படவில்லை. ஆரம்பத்தில், சிறுமியின் பெற்றோருக்கு இடையேயான திருமண தகராறு காரணமாக சிறுமிக்கு மனச்சோா்வு ஏற்பட்டது தெரியவந்தது என்று போலீஸாா் கூறினா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments