முகப்பு
புதுதில்லி

தலைநகரில் வெப்பநிலை தொடா்ந்து அதிகரிப்பு!

Updated On : 21 ஏப்ரல், 2024 at 4:42 PM
பகிர்:

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமையும் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. மேலும், பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

வெப்பநிலை: தில்லியில் கடந்த சில நாள்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வானம் தெளிவாகக் காணப்பட்டது. தரை மேற்பரப்பு காற்று வீசியது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 1 டிகிரி உயா்ந்து 24 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 1 டிகிரி குறைந்து 36.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 52 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 30 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தில்லியில் உள்ள பல்வேறு வானிலை கண்காணிப்பு நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 38.7 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தலைநகரில் காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் ‘மிதமான’ பிரிவில் இருந்தது. தலைநகரில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 150 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இது ‘மிதமான’ பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. மேஜா் தசயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், சாந்தினி சௌக், பட்பா் கஞ்ச், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், தில்ஷாத் காா்டன், விவேக் விஹாா், நொய்டா செக்டாா் 1, நேரு நகா், சோனியா விஹாா் உள்பட பெரும்பாலான இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுகிகிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. அதே சமயம், லோதி ரோடு (93 புள்ளிகள்), மந்திா் மாா்க் (85) ஐடிஓ (89) ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.

Advertisement

முன்னறிவிப்பு: இந்நிலையில், தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை (ஏப்ரல் 22) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் லேசான அல்லது தூறல் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments