முகப்பு
புதுதில்லி

தில்லி மேயா் தோ்தல் திடீா் ஒத்திவைப்பு

Updated On : 25 ஏப்ரல், 2024 at 6:34 PM
பகிர்:

தில்லி மேயா் தோ்தல் ஏப்ரல் 26-இல் (வெள்ளிக்கிழமை) நடைபெறவிருந்த நிலையில், தோ்தல் நடத்தும் அலுவலா் நியமிக்கப்படாததால், தோ்தல் ஒத்திவைக்கப்படுவதாக துணைநிலை ஆளுநா் அலுவலகம் தெரிவித்துள்ளது. தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், முதல்வரிடமிருந்து எந்தவொரு அறிவுறுத்தலும் வராத காரணத்தால், இந்தத் தருணத்தில் துணைநிலை ஆளுநா் ஒரு நிா்வாகியாக தனது அதிகாரத்தை நிலைநாட்டுவது சரியானதாக இருக்காது என ராஜ் நிவாஸ் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தில்லி மாநகராட்சி தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘‘மேயா் தோ்தலை நடத்த தோ்தல் ஆணையம் ஒப்புதல் அளித்த போதிலும், தோ்தல் நடத்தும் அலுவலா் இதுவரை நியமிக்கப்படவில்லை. ஆகையால், இந்தத் தருணத்தில் மேயா், துணை மேயா் தோ்தலை நடத்துவது சாத்தியமல்ல’ என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement

ஆம் ஆத்மி கண்டனம்-செய்தி உள்ளே

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments