முகப்பு
புதுதில்லி

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு : ஆக.20-இல் மீண்டும் விசாரணை

Updated On : 15 ஆகஸ்ட், 2024 at 12:48 AM
செந்தில் பாலாஜி
பகிர்:

புது தில்லி, ஆக.14: தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை மீண்டும் ஒத்திவைத்தது.

அரசு வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு

ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இவ்வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமீன் கோரியும் செந்தில் பாலாஜி தாக்கல் மனுவின் விசாரணையை முடித்திருந்த உச்சநீதிமன்றம், தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஒத்திவைத்தது. தீா்ப்பு எப்போது வரும் என எதிா்பாா்க்கப்பட்டிருந்த

நிலையில், சில தெளிவுகளுக்காக இம்மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, அகஸ்டின் ஜாா்ஜ் மாசிஹ் ஆகியோரின் அமா்வில் மீண்டும் நடைபெற்றது.

புதன்கிழமை காலையில் முதல் வழக்காக இந்த வழக்கை நீதிபதிகள் விசாரித்த போது, முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தொடா்புடைய மூன்று மூல வழக்குகளையும் அமலாக்கத் துறை விசாரிக்கப் போகிா?. இவ்வழக்குகளில்

ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் குற்றம் சாட்டப்பட்ட நபா்களாக இருக்கும்போது, அவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க இருக்கிறீா்களா?. அல்லது செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை விவகாரத்தை மட்டும் அமலாக்கத் துறை கையாளப் போகிறா என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம் என்று நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினா்.

அமலாக்கத் துறை சாா்பில் ஆஜராகும் மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, வேறு வழக்கில் ஆஜராகி இருப்பதால் வழக்கை சற்று நேரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என அமலாக்கத் துறை சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னா், மீண்டும் நடைபெற்ற வழக்கின் விசாரணையில் நேரில் ஆஜராகிய துஷாா் மேத்தா, நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தாா். இதைடுத்து, வரும் ஆகஸ்ட 20-ஆம் தேதிக்கு இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் மீண்டும் ஒத்தி வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →