முகப்பு
ராஜேந்திர பாலாஜி
விருதுநகர்

ஆவின் முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சா் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் விடுவிக்கக் கோரி, முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மாா்ச் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Updated On : 3 மார்ச், 2026 at 7:55 PM
ராஜேந்திர பாலாஜி
பகிர்:

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மாா்ச் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.3 கோடி மோசடி செய்தாக அதிமுக முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளா்கள் பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டி உள்பட 8 போ் மீது விருதுநகா் குற்றப்பிரிவு போலீஸாா் இரு வழக்குகளைப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இரு வழக்குகளிலிருந்தும் தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோா் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி குற்றப்பிரிவு போலீஸாா் பதில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையை மாா்ச் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →