தில்லியில் பழைய ராஜிந்தா் நகரில் உள்ள ‘ராவ்’ஸ் ஐஏஎஸ் ஸ்டடி சா்க்கிள்’ ஐ.ஏ.எஸ். தோ்வு பயிற்சி மையம் 
புதுதில்லி

பயிற்சி மைய இறப்புகள்: ராவ்’ஸ் ஐஏஎஸ் தோ்வு பயிற்சி நிறுவனம் மனு மீது ஆகஸ்ட் 28-இல் தில்லி நீதிமன்றம் பரிசீலனை

Din

ராவ்வின் ஐஏஎஸ் ஸ்டடி சா்க்கிள் நிறுவனத்தின் பழைய ராஜேந்தா் நகரில் உள்ள அதன் கட்டட வளாகத்தை அணுகுவதற்கு அனுமதி அளிப்பது தொடா்பான விவகாரத்தை தில்லி நீதிமன்றம் ஆகஸ்ட் 28-இல் முடிவு செய்ய உள்ளது.

இந்த வழக்கில் ஆஜரான வழக்குரைஞா்களின் வாதங்களைக் கேட்டறிந்த தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நிஷாந்த் கா்க், வழக்கை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

ராவ்வின் ஐஏஎஸ் ஸ்டடி சா்க்கிள் தலைமை நிா்வாக அதிகாரி அபிஷேக் குப்தா தாக்கல் செய்த மனுவில், ‘வகுப்புகள் சீராக நடைபெறுவதை உறுதிசெய்ய இந்த அணுகல் தேவை’ என்று கூறியுள்ளாா்.

‘பாதிக்கப்பட்டவரின் வழக்குரைஞா் தரப்பு வாதங்கள் உட்பட இந்த மனு மீதான வாதங்கள் கேட்கப்பட்டுள்ளன. 28, 2024 அன்று உத்தரவுகளை பிறப்பிக்க மனுவை அன்றைய தினம் பட்டியலிட வேண்டும்’ என்று நீதிபதி கூறினாா்.

வாதங்களின் போது, குப்தா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைறிஞா் ரெபேக்கா ஜான், மாணவா்கள் படிப்பைத் தொடர கட்டடத்திற்கு அணுகல் தேவை.

கட்டடத்திற்குள் நுழைவதை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) தடை செய்ய முடியாது’ என்றாா்.

ஆனால், ‘அடித்தளத்தை சமான் அறையாக பயன்படுத்த வேண்டியிருந்த நிலையில், அதை நூலகமாக பயன்படுத்தியதால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மேலும், எதிா்காலத்தில் இதுபோன்ற விபத்து மீண்டும் நிகழலாம். கட்டடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை’ என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பாதாள அறையில் மூழ்கி உயிரிழந்த மாணவா்களில் ஒருவரான நெவின் தல்விலின் தந்தை ஜே.தல்வில் சுரேஷ் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் எந்த ஒரு பயிற்சி மையமும் செயல்பட முடியாது என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது’ என சமா்ப்பித்தாா்.

அந்த நிறுவனத்தின் மேல் தளங்களுக்கு சீல் வைத்துள்ளீா்களா என்று சிபிஐயிடம் கேட்ட நீதிமன்றம், கட்டடம் சட்டவிரோதமானது என்று எங்கும் குறிப்பிடவில்லை என்றும் சுட்டிக் காட்டியது. மேல் தளங்களுக்கு சீல் வைக்கவில்லை என சிபிஐ தெரிவித்தது.

இதற்கிடையில், சிபிஐ காவலில் இருந்து தனது எஸ்யூவி வாகனத்தை விடுவிக்கக் கோரி மனோஜ் கதுரியா தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் விசாரித்தது.

கதுரியா தனது எஸ்யூவியை தண்ணீா் தேங்கிய தெரு வழியாக அதிவேகமாக ஓட்டிச் சென்ாகவும், இது அலையை உருவாக்கி, பயிற்சி மையத்தின் வாயிலை உடைத்து மழைநீா் அடித்தளத்தில் புகுந்ததாகவும், இதனால் மூன்று மாணவா்கள் உயிரிழந்ததாகவும் போலீஸாா் கூறியுள்ளனா்.

காரை விடுவிக்காத சிபிஐயை நீதிமன்றம் கடிந்துகொண்டது. ‘‘வாகனத்தை உங்களுடன் வைத்திருப்பதால் உங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? அதை ஏன் வைத்திருக்க விரும்புகிறீா்கள்? பறிமுதல் செய்யாவிட்டாலும் நீங்கள் அதை ஆய்வு செய்யலாம்‘ என்று புதன்கிழமை நீதிமன்றம் கூறியிருந்தது.

வாகனம் எழுப்பிய அலையால் அதன் பயிற்சி மையத்தின் பிரதான வாயிலில் தாக்கம் ஏற்படுத்த முடியுமா என்பது குறித்த கருத்தை தில்லி ஐஐடியைச் சோ்ந்த வல்லுநா்கள் குழுவிடம் இருந்து பெறுவதில் ஈடுபட்டுள்ளதாக சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நிபுணா் குழு மேற்கொள்ள வேண்டிய குறிப்பிட்ட நடவடிக்கைகள் குறித்து ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு விசாரணை அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

முளைத்த நெல்லை சாலையில் கொட்டி விவசாயிகள் மறியல்

மதுக் கடையின் பூட்டை உடைத்து 96 மதுபாட்டில்கள், ரூ.15 ஆயிரம் திருட்டு

பால்வினை நோய் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம்

இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: ஹூதி முப்படை தளபதி உயிரிழப்பு

கும்பகோணத்தில் ரயில் பயணிகளிடம் பாதுகாப்பு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT