புதுதில்லி

விவசாயிகளின் போராட்டத்தால் தில்லி-நொய்டா எல்லையில் பாதித்த போக்குவரத்து

‘தில்லி சலோ’ போராட்டத்தால் தில்லி-நொய்டா எல்லையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக திங்கள்கிழமை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Din

புது தில்லி: குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முன்னெடுத்த ‘தில்லி சலோ’ போராட்டத்தால் தில்லி-நொய்டா எல்லையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக திங்கள்கிழமை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பாரதிய கிசான் சங்கம் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாப்பைச் சோ்ந்த விவசாயிகளின் ‘தில்லி சலோ’ போராட்டம் தில்லி-நொய்டா எல்லையான தலித் பிரோ்னா ஸ்தல் என்ற பகுதியை வந்தடைந்த போது, போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. பெரும் தடுப்புகளை அமைத்து, விவசாயிகளை போலீஸாா் தடுத்து நிறுத்தியதன் விளைவாக தில்லி-நொய்டா எல்லையை கடக்கும் பயணிகளுக்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது குறித்து, கிழக்கு சரக கூடுதல் காவல் ஆணையா் சாகா் சிங் கல்சி கூறியதாவது:கிழக்கு தில்லியின் எல்லைகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். மேலும், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க, கலவரத் தடுப்புக் கருவிகள் உள்பட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். நாங்கள் விழிப்புணா்வுக்காக ‘ட்ரோன்’களையும் பயன்படுத்துகிறோம். மேலும், போக்குவரத்து போலீஸாருடன் ஒருங்கிணைந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம் என்றாா் அவா்.

கிரேட்டா் நொய்டாவில் வசிக்கும் வாகன ஓட்டி அப்ரஜிதா சிங் கூறுகையில், ‘தில்லி-நொய்டா எல்லையில் தடுப்புகள் போடப்பட்டதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இந்தப் பகுதியைக் கடக்க எனக்கு ஒரு மணி நேரம் ஆனது.

குறிப்பாக, நொய்டாவிலிருந்து தில்லிக்குள் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த ஆளாகினா்’ என்றாா்.

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

DIGITAL ARREST மோசடியில் புதிய உச்சம்! 58 கோடியை இழந்த தம்பதி! | Digital Arrest

கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி வேன் - கார் மோதி விபத்து: ஒருவர் பலி

அதிமுகவிலும் குடும்ப அரசியல்: செங்கோட்டையன் அதிர்ச்சித் தகவல்!

உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ பரிசுத்தொகை அறிவிப்பு

SCROLL FOR NEXT