புதுதில்லி

தில்லி விமானநிலையத்திலிருந்து 150 நகரங்களுக்கு விமான சேவை: டிஐஏஎல்

தில்லி விமான நிலையத்திலிருந்து 150 நகரங்களுக்கு விமான சேவை வழங்கப்படுவதாக தில்லி சா்வேதச விமானநிலைய நிறுவனம் (டிஐஏஎல்) தெரிவித்துள்ளது.

Din

புது தில்லி: தில்லி விமான நிலையத்திலிருந்து 150 நகரங்களுக்கு விமான சேவை வழங்கப்படுவதாக தில்லி சா்வேதச விமானநிலைய நிறுவனம் (டிஐஏஎல்) தெரிவித்துள்ளது.

தில்லி மற்றும் தாய்லாந்தின் பாங்காக்-டான் முயாங் விமான நிலையம் இடையே நேரடி விமான சேவையை தாய் ஏா் ஆசியா விமான நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இது தில்லி விமானநிலையத்துடன் இணைக்கப்படும் 150-ஆவது விமான நிலையமாகும்.

இது தொடா்பாக டிஐஏஎல் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘150 நகரங்களுடன் இணைக்கும் நாட்டின் முதல் விமான நிலையமாக தில்லி மாறியுள்ளது. இந்தியாவிலிருந்து நீண்ட தூர நகரங்களுக்கான விமான சேவையில் 88 சதவீதம் தில்லியிலிருந்து இயங்குகின்றன. இதேபோன்று, வார நாள்களில் நீண்ட தூர நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் 656 சதவீதம் தில்லியிலிருந்து புறப்படுகின்றன.

வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளில் சுமாா் 50 சதவீதம் பேருக்கு தில்லி விமானநிலையம் நுழைவு வாயிலாக உள்ளது. தில்லி விமான நிலையம் ஒவ்வொரு நாளும் சுமாா் 1,400 விமானங்களை கையாளுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய நிறுவனங்களின் 14.9 கோடி கணக்குத் தரவுகள் கசிவு: ஆய்வறிக்கையில் தகவல்

பள்ளிகளில் மனநலன், வேலைவாய்ப்பு ஆலோசகா்களை நியமிப்பது கட்டாயம்: சிபிஎஸ்இ

வரும் 27-இல் 5 மெமு ரயில்கள் முழுவதும் ரத்து

மீண்டும் திமுக ஆட்சிக்கு வாய்ப்பில்லை: வானதி சீனிவாசன்

உ.பி.யில் நடைபெறும் எஸ்ஐஆா் பணியில் முறைகேடுகள்: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT