முகப்பு
உலகம்

துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!

துபை சர்வதேச விமான நிலையத்தின் மீது வான் வழி தாக்குதல்!

Updated On : 7 மார்ச் 2026, 6:27 pm IST
ஈரான் வான் வழி தாக்குதல் - Center-Center-Delhi
பகிர்:

துபை விமான நிலையத்தில் சனிக்கிழமை ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகவும் இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்கி வருவதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், துபை விமான நிலையத்தின் மிக அருகே ஈரான் இன்று(மார்ச் 7) வான் வழி தக்குதல்களை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. சனிக்கிழமை காலையில் துபை சர்வதேச விமான நிலைய ஓடுதளம் ஒன்றில் ஈரானிலிருந்து ஏவப்பட்ட ட்ரோன் விழுந்து சேதம் விளைவித்ததால் கரும்புகை எழுந்ததாக கூறப்பட்டது. துபையில் நடைபெற்ற இந்தத் தாக்குதலின் எதிரொலியால், துபை சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதனிடையே, ஐக்கிய அரபு அமீரக வான்வெளி பாதுகாப்பு அமைப்பு மூலம் ஈரானிலிருந்து வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி அளிக்கப்பட்டு வருவதாகவும் அமீரக பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, பகுதியளவில் விமான நிலைய செயல்பாடு இயங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பயணிகள் விமான நிலையத்துக்கு வருகை தர வேண்டாமெனவும், அவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதைக் கருத்திற்கொண்டு அவற்றின் அடிப்படையில் வருகை தரவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

summary

Several blasts were heard in the city on Saturday morning -  flights to and from Dubai have been suspended "until further notice".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments