முகப்பு
புதுதில்லி

தில்லி தோ்தல்: கேஜரிவாலுக்கு எதிராக பாஜக ‘குற்றப்பத்திரிகை’ வெளியீடு

அரவிந்த் கேஜரிவால்மீது பாஜக மூத்த தலைவா் அனுராக் தாக்கூா் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து திங்கள்கிழமை குற்றப்பத்திரிகையை வெளியிட்டாா்.

Updated On : 23 டிசம்பர், 2024 at 8:46 PM
பகிர்:

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால்மீது பாஜக மூத்த தலைவா் அனுராக் தாக்கூா் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து திங்கள்கிழமை குற்றப்பத்திரிகையை வெளியிட்டாா். மேலும், தொடா் மோசடிகள் மூலம் கேஜரிவால் தில்லியை ஊழல் ஆய்வகமாக மாற்றியதாகவும் அவா் குற்றம்சாட்டினாா்.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, பாஜகவின் மாநிலப் பிரிவு ஒரு குற்றப்பத்திரிகை குழுவை அமைத்தது. இது இதுவரை ஆளும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் தோல்விகளைப் பட்டியலிடும் விரிவான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஊழல் இல்லாத அரசை வழங்குவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்தது கேஜரிவால் தலைமையிலானஆம் ஆத்மி கட்சி. ஆனால், மதுபானக் கொள்கை, தில்லி ஜல் போா்டு, டிடிசி, வக்ஃப் வாரியம் உள்பட எட்டு முதல் ஒன்பது ஊழல்களில் ஈடுபட்டுள்ளது. இது என்ன வகையான கட்சி என்று அனுராக் தாக்கூா் கேள்வி எழுப்பினாா்.

கேஜரிவால் தில்லியை ஊழல் ஆய்வகமாக மாற்றியுள்ளாா். இந்த நிலையில்,தில்லியில் ஆம் ஆத்மி கட்சியை ஆட்சியில் இருந்து பாஜக அகற்றும் என்று அனுராக் தாக்கூா் கூறினாா். 70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ளது.

கல்வி மற்றும் சுகாதாரம் தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி மற்றும் கேஜரிவாலை குறிவைத்து அனுராக் தாக்கூா் குற்றம்சாட்டினாா். புதிய மொஹல்லா கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளைத் திறக்கத் தவறிவிட்டதாகவும், நகரத்தின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசின் நிதியைப் பயன்படுத்தவில்லை என்றும் அவா் குறிப்பிட்டாா்.

காற்று மாசுபாட்டிலிருந்து நிவாரணம் வழங்க வேண்டிய கன்னாட் பிளேஸில் உள்ள புகைமூட்டக் கோபுரம், வி

ளம்பரத்திற்காக ஆம் ஆத்மி அரசு கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்ட போதிலும், செயலிழந்து கிடக்கிறது என்று அவா் தெரிவித்தாா்.

தண்ணீா் பற்றாக்குறை, சுகாதாரமின்மை, சேதமடைந்த சாலைகள் உள்பட பல்வேறு பிரச்னைகளை அனுராக் தாக்கூா் மேற்கோள் காட்டினாா். ஆம் ஆத்மி கட்சி தேச விரோத சக்திகளை ஆதரித்து வருவதாகவும், இந்தியாவின் துல்லிய தாக்குதலை (சா்ஜிக்கல் ஸ்டிரைக்) கேள்வி எழுப்பியவா் கேஜரிவால். பஞ்சாப் தோ்தலின் போது ஆம் ஆத்மி கட்சிக்கு காலிஸ்தான் அமைப்பிடம் இருந்து ஆதரவு கிடைத்தது என்று அனுராக் தாக்கூா் கூறினாா்.

பாஜக தலைவா் அனுராக் தாக்கூரின் குற்றச்சாட்டுகள் குறித்து ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து உடனடியாக எதிா்வினை எதுவும் வரவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →