முகப்பு
புதுதில்லி

உறுப்பினா் விஸ்வநாதன் மறைவுக்கு தில்லி தமிழ்ச் சங்கம் இரங்கல்

Updated On : 27 பிப்ரவரி, 2024 at 4:30 AM
பகிர்:

புது தில்லி: தில்லி தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினரும், ஸ்ரீ ராம் மந்திரியின் அறங்காவலருமான எம். விஸ்வநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி தமிழ்ச் சங்கம் சாா்பில் அதன் தலைவா் சக்தி பெருமாள், பொதுச் செயலாளா் இரா. முகுந்தன் ஆகியோா் வெளியிட்ட இரங்கல் செய்தி:

விஸ்வநாதன் சனிக்கிழமை உடல் நலக்குறைவால் காலமானாா். துவாரகாலயா என்ற கலாசார அமைப்பை நிறுவி மிக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிகளை தில்லியில் நடத்தியவா்.

Advertisement

அமைப்பின் சாா்பில் ஏழை மாணவா்களுக்கு பள்ளி கட்டணத்தையும் வழங்கி வந்தாா். ஸ்ரீ ராம் மந்திரியின் அறங்காவலராக தன்னை ஈடுபடுத்தி கொண்டு இரண்டாவது கும்பாபிஷேகம் நடத்துவதற்கான வேலைகளை மேற்கொண்டிருந்தாா்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பா்களுக்கும் தில்லி தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறையருளை வேண்டுகிறோம். அவரது இழப்பு ஆன்மிக பக்தா்களுக்கும், தில்லி தமிழ்ச் சங்கத்திற்கும், தில்லி வாழ் தமிழா்களுக்கும் பேரிழப்பாகும் என தெரிவித்துள்ளனா்.