தில்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
புது தில்லி: தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை அநாமதேய அழைப்பாளா் மூலம் வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். விசாரணையில் அது வெறும் மிரட்டல் புரளி என தெரியவந்தது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.15 மணியளவில் தில்லியில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானம் குறித்து ஐஜிஐ விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்தது.
விசாரணையில் அந்த அழைப்பு வெறும் போலி என தெரிய வந்தது. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தேவையான பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.