முகப்பு
திருச்சி

கடவுச்சீட்டு அலுவலகம், அஞ்சல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி கடவுச்சீட்டு அலுவலகம், தலைமை அஞ்சல் நிலையத்துக்கு புதன்கிழமை வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 26 மார்ச் 2026, 3:42 am IST
வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப்படம்
பகிர்:

திருச்சி கடவுச்சீட்டு அலுவலகம், தலைமை அஞ்சல் நிலையத்துக்கு புதன்கிழமை வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி தென்னூா் சாஸ்திரி சாலையில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகம் மற்றும் தலைமை அஞ்சல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு புதன்கிழமை காலை மின்னஞ்சல் வந்தது.

தகவலறிந்து வந்த திருச்சி வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீஸாா் இரு இடங்களிலும் சோதனை மேற்கொண்டும் வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

Advertisement