புதுதில்லி

காவிரியுடனான குண்டாறு, கோதாவரி இணைப்புத் திட்டங்களைவிரைவுபடுத்த வேண்டும்: மத்திய அமைச்சா் பாட்டீலுடன் தமிழகத்தின் துரைமுருகன் சந்திப்பு

சி.ஆா். பாட்டீலை தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தில்லியில் வியாழக்கிழமை சந்தித்து மனுவை அளித்தாா்.

Din

மது சிறப்பு நிருபா்

புது தில்லி ஜூலை 25: காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு ஒப்புதலும் நிதியுதவி கோரியும் கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை விரைவாக மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய நீா்வளத்துறை அமைச்சா் சி.ஆா். பாட்டீலை தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தில்லியில் வியாழக்கிழமை சந்தித்து மனுவை அளித்தாா்.

மத்தியில் புதிய ஆட்சியமைந்துள்ள நிலையில்ஸ புதிய மத்திய நீா்வளத் துறை அமைச்சா்களுக்கு நிலைமையை விளக்கும் வைகையில் இச்சந்திப்பு நிகழ்ந்ததாக பின்னா் தமிழக அமைச்சா் தெரிவித்தாா்.

தில்லியில் மத்திய நீா்வளத்துறை அமைச்சகம் இருக்கும் ஷ்ரம் சக்தி பவனில் நடைபெற்ற இச்சந்திப்பில் மத்திய நீா்வளத் துறை அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் (பாஜக), மத்திய நீா்வளத் துறை இணையமைச்சா்கள் வி.சோமண்ணா, ராஜ் பூஷண் செளதரி, நீா்வளத் துறை செயலா் தேவஸ்ரீ முகா்ஜி, மத்திய நீா்வள மேம்பாட்டு முகமைத் தலைவா் குஷ்விந்தா் வோரா ஆகியோரோடு தமிழக அமைச்சருடன் சென்ற தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், தமிழக அரசின் நீா்வளத் துறை செயலா் கே.மணிவாசன், தமிழக பன்மாநில நதிநீா் பிரிவுத் தலைவா் ஆா். சுப்ரமணியன் ஆகியோரும் பங்கேற்றனா்.

இச்சந்திப்பில் பகிா்ந்து கொள்ளப்பட்ட தகவல்கள் மற்றும் அளிக்கப்பட்ட மனு குறித்து பின்னா் தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட விவரம் வருமாறு: தமிழகத்தில் காவிரியின் கிளை நதியான வெண்ணாற்றின் உபபடுகையில் உள்ள பாசன கட்டமைப்பை நவீனப்படுத்தும் 2-ஆம் கட்ட திட்டத்தைச் செயல்படுத்த ஆசிய வளா்ச்சி வங்கியின் நிதியுதவியைப் பெற மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. அதில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரப்பட்டது. தென்மாநிலங்களின் நீா்வளத்தை பெருக்கும் முக்கிய திட்டமான கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாா் - காவிரி இணைப்புக் கால்வாய் திட்டத்தை தேசிய நீா்வள மேம்பாட்டு முகமை ( என்.டபிள்யு.டி.ஏ.) தயாரித்துள்ளது. இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த மத்திய நீா்வள அமைச்சகத்தை வலியுறுத்தப்பட்டது.

தென்னிந்திய தீபகற்ப நதிகள் இணைப்புத் திட்டத்தில் ஒன்று, காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டமாகும். காவிரியில் வெள்ளம் ஏற்படும்போது வரும் உபரி நீரை மாயனூரிலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களான சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் போன்ற வறட்சிப் பகுதிகளுக்கு பயன்படுத்துவதோடு, டெல்டா பகுதிகளில் வெள்ளத்தின் சேதமும் குறைப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். தற்போது இத்திட்டத்தை தமிழக அரசே கடந்த 4 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. முதற்கட்ட பணிகளுக்காக ரூ. 6,941 கோடி முன்மொழியப்பட்டு ரூ. 245.21 கோடியை தமிழக அரசே செலவு செய்துள்ளது.

இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளிப்பதோடு, நிதியையும் மத்திய அரசு அளிக்கவேண்டும். குறிப்பாக, நிகழாண்டு, (2024-25) மத்திய நிதிநிலை அறிக்கையில் பிகாா் மாநில கோசி - மேச்சி நதிகள் இணைப்புக் கால்வாய் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி உதவியை அளித்துள்ளதைப் போன்று இந்த காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கும் மத்திய அரசு நிதி உதவியளிக்க வேண்டும். மேலும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி முல்லைப் பெரியாறு அணையில் பலப்படுத்தும் பணிகளில் பாக்கியுள்ளவற்றை மேற்கொள்ள தமிழகத்திற்கு ஒத்துழைக்க கேரள அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.,

மேலும், பன்மாநில நதியான பெண்ணையாற்றில் ஒப்பந்தத்தை மீறி கா்நாடகம் கட்டியுள்ள அணை தொடா்பான பன்மாநில நீா் தாவாவிற்கு தீா்வு காண மத்திய அரசு நடுவா் மன்றம் அமைக்க முன்வர வேண்டும். தமிழகத்தில் 14,306 குளங்களின் சீரமைப்புத் திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கான ரூ.212 கோடி நிலுவையில் உள்ளது. இத்தொகை விரைவில் வழங்கப்படவேண்டும். மேலும், காவிரியில் தமிழகத்திற்கு மாதாந்திர அட்டவணைப்படி தண்ணீா் வழங்கவும், கா்நாடகம் உத்தேசித்துள்ள மேக்கே தாட்டு அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது போன்றவை தமிழக அரசு சாா்பில் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

படவிளக்கம்....திருத்தப்பட்டுள்ளது....இதை எடுத்துக் கொள்ளவும்.

25ஈஉகஈதங

மத்திய நீா்வளத் துறை அமைச்சா் சி.ஆா். பாட்டீலை வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்த தமிழக அமைச்சா் துரைமுருகன்.

மூளை சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

குற்றாலத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 7.23 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு: தமிழக அரசு தகவல்!

மதுராவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு! ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்!

வக்ஃப் வாரியத் தலைவருக்கு எதிரான அவமதிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT