முகப்பு
புதுதில்லி

மத்திய பட்ஜெட் ஒதுக்கீட்டில் தில்லிக்கு அநீதி அமைச்சா் அதிஷி சாடல்

தில்லிக்கான பட்ஜெட் ஒதுக்கீடு தொடா்பாக தில்லி நிதியமைச்சா் அதிஷி வியாழனன்று மத்தியில் ஆளும் பாஜகவைத் கடுமையாக விமா்சித்தாா்.

Updated On : 26 ஜூலை, 2024 at 12:27 AM
அதிஷி
பகிர்:
Updated On : 25 ஜூலை, 2024 at 6:31 PM

புது தில்லி, ஜூலை 25: தில்லிக்கான பட்ஜெட் ஒதுக்கீடு தொடா்பாக தில்லி நிதியமைச்சா் அதிஷி வியாழனன்று மத்தியில் ஆளும் பாஜகவைத் கடுமையாக விமா்சித்தாா்.

மேலும், தேசியத் தலைநகரில் வசிப்பவா்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை மத்திய அரசுக்கு வருமான வரியாகக் கொடுக்கின்றனா். ஆனால், மத்திய பட்ஜெட்டில் தில்லிக்கு அநீதி ஏற்பட்டுள்ளது என்றும் அவா் கூறினாா்

தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா் கூட்டத்தில் அவா் கூறியதாவது: 2022-23 நிதியாண்டில் தில்லி மக்கள் ரூ.2.12 லட்சம் கோடி வருமான வரி செலுத்தியுள்ளனா். ஆனால், அடுத்த நிதியாண்டில் மத்திய அரசு வெறும் ரூ.1,168 கோடியை வழங்கியுள்ளது. இது தில்லி மக்கள் செலுத்தும் வரியில் 0.4 சதவீதம் கூட இல்லை.

Advertisement

‘ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் பொய் சொல்கிறாா்கள் என்றும் மத்திய அரசு பட்ஜெட்டை விட அதிகமாகக் கொடுத்துள்ளது’ என்றும் பாஜக கூறியுள்ளது. ஆனால், 15.59 லட்சம் கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு வெறும் 7,534 கோடி ரூபாயை கொடுத்த பாஜக தலைமையிலான மத்திய அரசின் கைகளால் தில்லி காலனி ஆதிக்கத்தை அனுபவித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தில்லிவாசிகள் உழைத்து சம்பாதித்த பணத்தை மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளனா். ஆனால், அதற்கு ஈடாக 0.48 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது.

2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசுக்கான (ஜிஎன்சிடிடி) ஒதுக்கீடு 2023-24-ஆம் ஆண்டைப் போலவே 1,168 கோடி ரூபாயாக இருந்தது. மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து தில்லிக்கு மாற்றப்பட்டதில் வருவாய்த் துறையின் கீழ் ரூ.1,168 கோடியும், மூலதனத் தலைப்பின் கீழ் ரூ.0.01 கோடியும் அடங்கும் என்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஆவணத்தில் உள்ளது.

2022-23 பட்ஜெட்டில் தில்லிக்கு ரூ.960 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகை பின்னா் 2023-24-ல் ரூ.1,168.01 கோடியாக உயா்த்தப்பட்டது. அது 2024-25-க்கும் அப்படியே உள்ளது என்றாா் அமைச்சா் அதிஷி.