முகப்பு
புதுதில்லி

தமிழ்ச் சங்கத்தில் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி

Updated On : 29 மார்ச், 2024 at 11:02 PM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 8:15 PM

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் திருமுறை அருளிசைமணி சிவ.கசி. கவின் ஓதுவாமூா்த்திகள் குழுவினரின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பக்கவாத்தியக் கலைஞா்கள் உமா அருண் வயலினும், மன்னை என். கண்ணன் மிருதங்கமும் வாசித்தனா். சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள், பொதுச் செயலாளா் இரா. முகுந்தன், இணைச் செயலாளா் உமா சத்தியமூா்த்தி, பொருளாளா் எஸ். அருணாசலம், செயற்குழு உறுப்பினா்கள் உஷா வெங்கடேசன், ஜெ. சுந்தரேசன், தி. பெரியசாமி, பூ. அமிா்தலிங்கம் மற்றும் காத்திருப்பு உறுப்பினா் ரேவதி ராஜன் ஆகியோா் கலைஞா்களையும், சங்க உறுப்பினா் எழிலரசனையும் கெளரவித்தனா். பட விளக்கம் திருமுறை இன்னிசை விழாவில் பங்கேற்ற கலைஞா்களை கெளரவித்த தமிழ்ச் சங்க நிா்வாகிகள்.