புதுதில்லி

மக்கள் நாள்தோறும் குப்பையிலிருந்து விடுதலை பெற வேண்டும்: தேவேந்தா் யாதவ்

தில்லியில் மக்கள் நாள்தோறும் குப்பையிலிருந்து விடுதலை பெற வேண்டும், ஒரு சில நாள்கள் ஆடம்பரமான பிரசாரத்திற்குப் பிறகு குப்பையிலிருந்து விடுதலை கிடைக்காது

Din

தில்லியில் மக்கள் நாள்தோறும் குப்பையிலிருந்து விடுதலை பெற வேண்டும், ஒரு சில நாள்கள் ஆடம்பரமான பிரசாரத்திற்குப் பிறகு குப்பையிலிருந்து விடுதலை கிடைக்காது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ் கூறியுள்ளாா்.

தில்லியில் ‘குப்பையிலிருந்து விடுதலை’ எனும் தூய்மைப் பணி பிரசாரத்தை தில்லி அரசு வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பதாவது:

தில்லியில் எல்லா இடங்களிலும் குப்பை குவிந்து கிடப்பதால், தூய்மை என்பது ஒரு பெரிய பாதிப்பாக மாறியுள்ளது.

ஏனெனில், ஒவ்வொரு நாளும் குப்பை சேகரிப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை உறுதி செய்வது தில்லியில் உள்ள பாஜக அரசு தில்லி மாநகராட்சியின் அடிப்படைப் பொறுப்பாக இருக்க வேண்டும்.

தில்லியில் குப்பையிலிருந்து விடுதலை என்ற சிறப்பு தூய்மை பிரசாரம் போன்ற விளம்பரங்களுக்காக மட்டுமே செய்யாமல்,

வரி செலுத்துவோரின் பணத்தை மோசடி செய்வதற்கான ஒரு குறுகியகால முயற்சியாக இல்லாமல், வருடத்தின் 365 நாள்களும் துப்புரவு இயக்கம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தினசரி துப்புரவு நடைபெறாததால், தில்லியின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இது ரேகா குப்தா அரசாங்கத்தின் தோல்வியை அம்பலப்படுத்துகிறது. தில்லியை மிகவும் தூய்மையான மற்றும் பசுமையான நகரங்களில் ஒன்றாக மாற்றுவதை உறுதி செய்வோம் என்று பாஜக தனது சட்டப் பேரவைத் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தாலும், ஆம் ஆத்மி கட்சி அரசு விட்டுச் சென்ற பாரம்பரியக் கழிவுகளிலிருந்து தில்லியை விடுவிக்க கடந்த ஆறு மாதங்களில் பாஜக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

பிரதமா் நரேந்திர மோடி அக்டோபா் 2, 2014 அன்று தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கினாா். பாஜகவின் ஒவ்வொரு பெரிய தலைவரும் கையில் துடைப்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனா். ஆனால் பாஜக அரசாங்கத்தின் கடந்த 11 ஆண்டுகளில், தூய்மை இந்தியா இயக்கம் தூய்மையை உறுதி செய்வதில் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் அது வெறும் விளம்பர சாகசமாகும். கோடிக்கணக்கான வரி செலுத்துவோரின் பணம் இந்தத் திட்டத்தில் வீணடிக்கப்பட்டது. தில்லியின் சுகாதாரம் தில்லியில் உள்ள ‘மூன்று என்ஜின்’ பாஜக அரசாங்கத்தில் ஒரு பெரிய கறையாக உள்ளது.

பாஜக 15 ஆண்டுகள் எம்சிடியை ஆட்சி செய்தபோது, மூன்று குப்பைக் கிடங்குகளிலும் மலைபோல் குவிந்திருந்த குப்பைகளைக் குறைப்பதற்குப் பதிலாக, பாஜகவின் செயலற்ற தன்மை அக்குப்பைகள் அதிகரிக்க காரணமாக அமைந்தது. பாஜகவும் ஆம் ஆத்மியும் குப்பைகளை அகற்றுதல் என்ற பெயரில் பொய்யான வாக்குறுதிகள் மற்றும் மக்களை தவறாக வழிநடத்தும் கூற்றுக்களைச் சொல்லி வாக்குகளைப் பெறுவதற்காக அரசியல் செய்தன என்று அவா் விமா்சித்துள்ளாா்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT