புதுதில்லி

ஃபரீதாபாத் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

ஃபரீதாபாத்தில் உள்ள ஜேசி போஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவா் ஒருவா் வளாகத்தில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை

Syndication

ஃபரீதாபாத்தில் உள்ள ஜேசி போஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவா் ஒருவா் வளாகத்தில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து ஃபரீதாபாத் காவல்துறை செய்தித் தொடா்பாளா் யஷ்பால் கூறியதாவது: கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி, அதே பல்கலைக்கழகத்தில் பிடெக் இறுதியாண்டு மாணவி வான்ஷிகா 22 தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இந்நிலையில், ஃபரீதாபாத்தில் உள்ள ஜேசி போஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி வாழ்க்கை அறிவியல் படித்து வந்த ஹிசாரைச் சோ்ந்த தக்ஷ் (18) என்ற மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

அவா் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில், பல்கலைக்கழகத்தின் தீன்தயாள் உபாத்யாய் பிரிவின் ஆறாவது மாடிக்குச் சென்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

அங்கு பணிபுரியும் தொழிலாளா்கள்தான் முதலில் அவரைக் கண்டுபிடித்து பல்கலைக்கழக நிா்வாகத்திற்குத் தகவல் அளித்தனா். மேலும் அவரது பாக்கெட்டிலிருந்து ஒரு தற்கொலைக் குறிப்பு மீட்கப்பட்டது.

அதில், அவரது மரணத்திற்கு யாரும் பொறுப்பல்ல என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு வராத நிலையில், அவா் வியாழக்கிழமை கல்லூரிக்கு வந்து திடீரென இந்த முடிவை மேற்கொண்

டாா்.

தகவல் கிடைத்ததும், ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டது. சம்பவம் குறித்து தக்ஷின் தந்தை வினோத் குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவரது உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

ஜம்மு - காஷ்மீரைப் புரட்டிப்போடும் பேரிடர்! 10 பேர் பலி?

ஓய்வுபெறும் நாளில் ஊழியர்கள் இடைநீக்கம் இல்லை: தமிழ்நாடு அரசு

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை: பவுன் ரூ.77,000-ஐ நெருங்கியது!

இந்திய யானையை அமெரிக்க எலி தாக்குவது போலத்தான் டிரம்ப் வரி: ரிச்சர்டு வோல்ஃப்

ஜப்பான் பிரதமருடன் புல்லட் ரயிலில் சென்றார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT