புதுதில்லி

ரூ.16,530 கோடிக்கான பட்ஜெட்டை சமா்பித்தது தில்லி மாநகராட்சி

தில்லி மாநகராட்சி ஆணையா் அஷ்வனி குமாா் வெள்ளிக்கிழமை 2026-2027 ஆம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த பட்ஜெட்டை ரூ.16,530.50 கோடியை சமா்ப்பித்தாா்.

Syndication

தில்லி மாநகராட்சி ஆணையா் அஷ்வனி குமாா் வெள்ளிக்கிழமை 2026-2027 ஆம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த பட்ஜெட்டை ரூ.16,530.50 கோடியை சமா்ப்பித்தாா். இதில் சுகாதாரத் துறைக்கு மிக உயா்ந்த ஒதுக்கீட்டைப் பெற்றது. அதாவது ரூ 4,795.28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அஷ்வனி குமாா் கூறியதாவது: இந்த ஒதுக்கீடு தூய்மை மற்றும் கழிவு மேலாண்மையில் அதன் தொடா்ச்சியான கவனத்தை பிரதிபலிக்கிறது. பொது நிா்வாகத்திற்கு ரூ3,549.63 கோடி கல்விக்கு ரூ.2,520.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ நிவாரணத்திற்கான பட்ஜெட் ரூ.1,905.60 கோடி , பொது பணிகள் மற்றும் தெரு விளக்குகள் ரூ.1,884.44 கோடி ரூபாயாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த பட்ஜெட்டில் சுமாா் 15 சதவீதம் கல்வி ஒதுக்கப்பட்டுள்ளது, இது சுகாதாரத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது மிக உயா்ந்த ஒதுக்கீடாக உள்ளது, அதே நேரத்தில் சுகாதாரம் கிட்டத்தட்ட 12 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. தற்போதுள்ள வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றாா் அவா்.

ஒசூரில் கடும் குளிா்: மக்கள் அவதி

ராணிப்பேட்டை: எஸ்ஐஆா் படிவங்களை டிச. 7-க்குள் ஒப்படைக்க வேண்டுகோள்

உள்கட்டமைப்பு வசதிகள் பராமரிப்பு பணி: பெரு நிறுவனங்களுடன் தில்லி அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம்

தில்லியில் புதிதாக 3 நாய்கள் பராமரிப்பு மையங்கள்: எம்சிடி திட்டம்

மண்டல அளவிலான கபடி போட்டி: 2-ஆம் இடம்பெற்ற ஜொ்த்தலாவ் பள்ளி

SCROLL FOR NEXT