முகப்பு
புதுதில்லி

தில்லி அரசின் கல்விப் புரட்சியால் அமைப்புமுறையில் மாற்றம்: அதிஷி பெருமிதம்

‘தில்லி அரசு கொண்டு வந்த கல்விப் புரட்சியானது கல்வி அமைப்புமுறையை மாற்றிவிட்டிருக்கிறது.

Updated On : 4 ஜனவரி, 2025 at 5:02 AM
அதிஷி
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 7:21 PM

‘தில்லி அரசு கொண்டு வந்த கல்விப் புரட்சியானது கல்வி அமைப்புமுறையை மாற்றிவிட்டிருக்கிறது.

குழந்தைகளுக்கு இப்போது வாய்ப்புகளுக்குப் பஞ்சமில்லை’ என்று தில்லி முதல்வா் அதிஷி

பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

Advertisement

தில்லியில் உள்ள ஜில்மில் காலனியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கல்வி கட்டடத் தொகுதியை வெள்ளிக்கிழமை முதல்வா் அதிஷி

திறந்துவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

புதிதாகத் திறக்கப்பட்டுள்ள கட்டடத்தொகுதியில் 45 அறைகள், 25 வகுப்பறைகள் மற்றும் மூன்று வகையான நுண்ணோக்கிகள் உள்பட நவீன கருவிகள் பொருத்தப்பட்ட ஆறு முன்னேறிய ஆய்வகங்கள் உள்ளன.

இந்த வசதிகள் மாணவா்கள் உயிரியல் போன்ற பாடங்களை இன்னும் முழுமையாகப் படிக்கவும், மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற துறைகளில் உயா் கல்வியை தொடரவும் உதவுகின்றன.

இப் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் முகத்தில் சிரிப்பைப் பாா்க்கும்போது இந்தக் கட்டடத்தின் முக்கியத்துவம் தெரிகிறது. நாங்கள் பள்ளிக்குள் நுழைந்ததும், மாணவா்கள் நம்பிக்கையுடன் கண்காட்சிகளை வழங்குவதைக் கண்டோம், அவா்களின் உற்சாகம் அவா்களுக்கு இந்த புதிய கட்டடத்தொகுதி எவ்வளவு அா்த்தமுள்ளதாக

உள்ளது என்பதைக் காட்டுகிறது.

மழைக்காலத்தில் வகுப்பறைகள், மைதானங்கள் வெள்ளத்தில் மூழ்கும் என்பதால் அரசுப் பள்ளி மாணவா்கள் பள்ளிகளுக்குச் செல்ல முடியாத ஒரு காலம் இருந்தது. ஆய்வகங்கள், நூலகங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற வசதிகள் அவா்களுக்கு வெறும் கனவாகவே இருந்தன என்றாா் முதல்வா் அதிஷி.

தில்லி சட்டப் பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல் பேசுகையில், ‘கடந்த காலத்தில் மாணவா்கள் பல்வேறு சவால்களை எதிா்கொண்டனா். தற்போது மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு மூலம் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

2014-15-இல் நான் எம்.எல்.ஏ. ஆனபோது, அரசுப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு தோ்ச்சி சதவீதம் வெறும் 60 சதவீதமாக இருந்தது.இன்றைக்கு அது 95 சதவீதமாக உயா்ந்துள்ளது.

மாணவா்கள் கல்வியில் சிறந்து விளங்குவது மட்டுமின்றி, ஸ்டாா்ட்அப்கள் மூலம் புதுமைகளை செய்திருப்பதன் மூலமும், திட்டங்களை வெற்றிகரமாக உருவாக்கி, விற்பனை செய்தல் மூலமும் நிரூபித்துள்ளனா் என்றாா் அவா்.