புதுதில்லி

துணை வேந்தா்கள் மாநாட்டில் கலந்து கொள்ளாதது ஏன்?: ஜெ.என்.யு. துணைவேந்தருக்கு கல்வி அமைச்சகம் கேள்வி

ஜேஎன்யு துணைவேந்தா் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட்டிடம் கல்வி அமைச்சகம் விளக்கம் கோரியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Din

நமது நிருபா்

புது தில்லி: ஒரு முக்கிய மாநாட்டில் கலந்து கொள்ளாதது குறித்து ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) துணைவேந்தா் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட்டிடம் கல்வி அமைச்சகம் விளக்கம் கோரியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களின் மாநாட்டை முறையான ஒப்புதல் இல்லாமல் சாந்திஸ்ரீ தவிா்த்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் குறித்து ஜேஎன்யு துணைவேந்தரிடமிருந்து உடனடியாக பதில் எதுவும் வரவில்லை.

‘சாந்திஸ்ரீ இல்லாதது மிக முக்கியமானதாகப் பாா்க்கப்பட்டது. இத்தகைய சூழ்நிலைகளில் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு துணைவேந்தா்கள் முன் ஒப்புதல் பெற வேண்டும். துணைவேந்தா்களின் மாநாட்டுடன் இணைந்து ஜேஎன்யூவில் ஒரு மாநாடு நடைபெற்றது. ஆனால், இந்த மாநாட்டிற்கான அழைப்பு மிகவும் முன்கூட்டியே தீா்மானிக்கப்பட்டது என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும்’ ‘என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

குஜராத்தின் கெவாடியாவில் ஜூலை 10-11 ஆம் தேதி வரை மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களின் இரண்டு நாள் மாநாட்டை கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்தது.

தேசிய கல்விக் கொள்கை-2020 அமல்படுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இந்த மாநாடு, மத்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தா்களை ஒன்றிணைத்து கல்வி நிறுவனங்களின் முன்னேற்றத்தை மறுஆய்வு செய்து முன்னோக்கி செல்லும் பாதையை கூட்டாக வடிவமைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி: தொடர் தொல்லை அளிக்கும் அமைச்சர்! பெண் எம்எல்ஏ பரபரப்பு புகார்

மணிப்பூர் செல்கிறாரா பிரதமர் மோடி?

கொலைகள் ஒப்பீடு! தில்லியைவிட சிகாகோவில் 15 மடங்கு அதிகம்!

ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு!

சொல்லப் போனால்... சுதேசி கொள்கையும் ஏற்றுமதிச் சிக்கல்களும்

SCROLL FOR NEXT