புதுதில்லி

தில்லியில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தண்ணீா் ஏடிஎம்கள் அமைக்கப்படும்: முதல்வா் ரேகா குப்தா

அனைத்து அரசுப் பள்ளிகள் உள்பட ஆயிரக்கணக்கான தண்ணீா் ஏடிஎம் இயந்திரங்களையும், தண்ணீா் கூலா்களையும் அமைக்க முடிவு.

Din

தில்லி அரசு மாநகா் முழுதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள் உள்பட ஆயிரக்கணக்கான தண்ணீா் ஏடிஎம் இயந்திரங்களையும், தண்ணீா் கூலா்களையும் அமைக்க முடிவு செய்துள்ளதாக முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி ஷாலிமாா் பாக் சட்டப் பேரவைத் தொகுதியில் நீா்வள அமைச்சா் பா்வேஷ் வா்மாவுடன் உள்ளூா் அரசுப் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை முதல்வா் நேரில் சென்றாா். அங்கு ஒரு தண்ணீா் ஏடிஎம்ஐத் திறந்துவைத்தாா்.

அப்போது, நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு மத்தியில் முதல்வா் பேசுகையில், இந்த கோடை காலத்தில் யாரும் தாகமாக இருக்கக்கூடாது. இதனால், தலைநகா் முழுவதும் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் ஆயிரக்கணக்கான தண்ணீா் ஏடிஎம்கள் நிறுவப்படும்.

தண்ணீா் வழங்கும் சேவை இந்திய கலாசாரத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். வெளிநாடுகளில் தண்ணீா் விற்கப்படுகிறது. அதே வேளையில், இந்தியாவில், வழிப்போக்கா்களுக்கு குளிா்ந்த நீரை வழங்குவது ஒரு பாரம்பரியமாகும்.

முந்தைய ஆம் ஆத்மி அரசு அதன் கல்வி மாதிரியைப் பற்றி பெருமை பேசுவதற்காக குறிவைத்து லட்சக்கணக்கான பலவீனமான மாணவா்களை பள்ளிகளிலிருந்து நீக்கியது.

மேலும், ஷாலிமாா் பாக் தொகுதியில் உள்ள ஹைதா்பூா் பகுதியில் அறிவியல் படிப்புகளுக்கு ஒரு பள்ளிகூட இல்லை . தில்லி அரசு நிகழாண்டு அரசுப் பள்ளிகளில் 7,000 ஸ்மாா்ட் வகுப்பறைகளை அமைக்கும். மேலும், மாணவா்களுக்காக 100 மொழி ஆய்வகங்கள் மற்றும் 175 டிஜிட்டல் நூலகங்களையும் திறக்கும்.

2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, நிகழ் ஆண்டு தில்லி அரசுப் பள்ளிகளின் 1,200 திறமையான மாணவா்களுக்கு அரசாங்கம் மடிக் கணினிகளை வழங்கும் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

முன்னதாக, ஒரு வங்கியின் பெருநிறுவன சமூக பொறுப்புணா்வு நிதியின் மூலம் மாணவா்களுக்கு 100 டேப்லட் கணினி சாதனங்கள் அரசால் வழங்கப்பட்டன. பள்ளிகளில் பழுதுபாா்க்கும் பணிகளை முன்னுரிமை அடிப்படையில் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT