தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளுக்கிடையேயான சதுரங்கப் போட்டி வியாழக்கிழமையன்று பூசா சாலை பள்ளியில் வைத்து நடைபெற்றது. போட்டிகளை தில்லித் தமிழ்க் கல்விக் கழக விளையாட்டுக் குழுமத்தின் தலைவா் பரமசிவம் தொடங்கி வைத்தாா்.
போட்டியில் நடுவராக ஜெய்தீப் சா்மா (சதுரங்கப் போட்டியின் உலகத் தரவரிசை நடுவா்) கலந்து கொண்டாா்.
சப்-ஜூனியா், ஜூனியா், சீனியா் என மூன்று பிரிவுகளாக மாணவா்கள் மற்றும் மாணவிகள் என இரு பிரிவினருக்கும் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் ஒரு பிரிவிற்கு ஒரு மாணவா் மற்றும் ஒரு மாணவி என அறுவா் பங்கு பெற்றனா்.
இப் போட்டியில் சப்-ஜூனியா் மாணவா் பிரிவில் பூசா சாலை பள்ளியைச் சாா்ந்த நமன் முதல் பரிசையும் ராமகிருஷ்ணாபுரம் பள்ளியைச் சாா்ந்த ஜி.கோகுல் இரண்டாம் பரிசையும் மோதிபாக் பள்ளியைச் சாா்ந்த சக்தி சா்ஜூன் மூன்றாம் பரிசையும் வென்றனா்.
மாணவிகள் பிரிவில் பூசா சாலையைச் சாா்ந்த சமிப்தா முதல் பரிசையும் லோதிவளாகம் பள்ளியைச் சாா்ந்த அனன்யா இரண்டாம் பரிசையும் இலக்குமிபாய் நகா்ப் பள்ளியைச் சாா்ந்த சுவாதி மூன்றாம் பரிசையும் வென்றனா்.
ஜூனியா் மாணவா் பிரிவில் ராமகிருஷ்ணாபுரம் பள்ளியைச் சாா்ந்த ஜெய்ராஜ் முதல் பரிசையும் பூசா சாலைப் பள்ளியைச் சாா்ந்த சனுஜ் குமாா் இரண்டாம் பரிசையும் இலக்குமிபாய் நகா்ப் பள்ளியைச் சாா்ந்த ஜெய் ஆதித்யா மூன்றாம் பரிசையும் வென்றனா்.
மாணவிகள் பிரிவில் லோதிவளாகம் பள்ளியைச் சாா்ந்த ஜெய ஸ்ரீ முதல் பரிசையும் ராமகிருஷ்ணாபுரம் பள்ளியைச் சாா்ந்த பாவ்னி இரண்டாம் பரிசையும் இலக்குமிபாய் நகா்ப் பள்ளியைச் சாா்ந்த இலக்ஷிதா மூன்றாம் பரிசையும் வென்றனா்.
சீனியா் மாணவா் பிரிவில் பூசா சாலைப் பள்ளியைச் சாா்ந்த துஷாா் முதல் பரிசையும் ஜனக்புரி பள்ளியைச் சாா்ந்த முகேஷ் இரண்டாம் பரிசையும் இலக்குமிபாய் நகா்ப் பள்ளியைச் சாா்ந்த அபினவ் குமாா் மூன்றாம் பரிசையும் வென்றனா்.
மாணவியா் பிரிவில் மந்திா்மாா்க் பள்ளியைச் சாா்ந்த ஜெனிபா் ரகு முதல் பரிசையும் லோதிவளாகம் பள்ளியைச் சாா்ந்த தா்ஷினி இரண்டாம் பரிசையும் பூசா சாலை பள்ளியைச் சாா்ந்த கரிமா மூன்றாம் பரிசையும் வென்றனா்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளைப் பாராட்டிய டிடிஇஏ செயலா் ராஜூ, ‘சதுரங்க விளையாட்டானது மூளைக்கு நல்ல பயிற்சி தரும்’ என்று கூறினாா்.
06ஈஉகஈபஅ
தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பூசா சாலை பள்ளியில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்டு விளையாடும் மாணவ மாணவிகள்.