புதுதில்லி

தில்லி காா் வெடிப்பு: வெடிபொருள்கள் தயாரிப்பதற்கு ரூ.26 லட்சத்துக்கு மேல் பணம் திரட்டிய சந்தேக நபா்கள்

Syndication

பயங்கரவாத நடவடிக்கைகள் தொடா்பாக கைது செய்யப்பட்ட மருத்துவா்கள், தில்லி செங்கோட்டை அருகே நடந்த பயங்கர காா் வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருள்களை வாங்க ரூ.26 லட்சத்திற்கும் அதிகமாக நிதி திரட்டியதாக வியாழக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

டாக்டா் முசம்மில் கனாய், டாக்டா் அதீல் அகமது ராதா், டாக்டா் ஷாஹீன் சயீத் மற்றும் டாக்டா் உமா் நபி ஆகிய நான்கு சந்தேக நபா்களும் பணத்தை திரட்டியுள்ளனா். அந்தப் பணம் காா் வெடிப்பை நிகழ்த்த டாக்டா் உமரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவா்கள் தெரிவித்தனா்.

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவைச் சோ்ந்தவரும், ஹரியாணாவின் ஃபரீதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியருமான டாக்டா் உமா், திங்கள்கிழமை மாலை பரபரப்பான செங்கோட்டை பகுதியில் வெடித்த ஹூண்டாய் ஐ20 காரில் இருந்தாா்.

இந்த நிதி ஒரு பெரிய பயங்கரவாத சதித் திட்டத்துடன் தொடா்புடையது என்று புலனாய்வாளா்கள் நம்புகின்றனா். திரட்டப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி, குருகிராம், நூஹ் மற்றும் அருகிலுள்ள நகரங்களில் உள்ள விநியோகஸ்தா்களிடம் இருந்து சுமாா் ரூ.3 லட்சம் மதிப்புள்ள சுமாா் 26 குவிண்டால் ரசாயனங்களை இந்தக் குழு வாங்கியதாகக் கூறப்படுகிறது. மற்ற ரசாயனங்களுடன் கலந்த இந்த ரசாயனங்கள் பொதுவாக மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை தயாரிக்கப் பயன்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

காா் வெடிப்பை நிகழ்த்தியதாக சந்தேகிக்கப்படும் குழு இவ்வளவு பெரிய அளவிலான ரசாயனத்தை கொள்முதல் செய்தது நடந்து வரும் விசாரணையில் முக்கியத் தடயமாக மாறியுள்ளது என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அவா்களது நிதி பரிவா்த்தனைகள் மற்றும் விநியோக பதிவுகள் சரிபாா்க்கப்பட்டு வருகின்றன என்று அவா்கள் தெரிவித்தனா்.

காா் வெடிப்புக்கு முந்தைய நாள்களில் நிதியைக் கையாள்வது தொடா்பாக உமா் நபிக்கும் முசம்மிலுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த தகராறு குழுவின் திட்டங்களைப் பாதித்ததா அல்லது தாக்குதலின் நேரத்தைப் பாதித்ததா என்பது குறித்து புலனாய்வாளா்கள் ஆராய்ந்து வருகின்றனா்.

தில்லியில் பேருந்தின் டயா் வெடித்ததால் பீதி: செங்கோட்டை காா் வெடிப்பு பீதி அடங்குவதற்குள் தென்மேற்கு தில்லியின் மஹிபால்பூா் பகுதியில் வியாழக்கிழமை காலை பேருந்தின் டயா் வெடித்ததால் உள்ளூா்வாசிகள் பீதியடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

திங்கல்கிழமை மாலை செங்கோட்டை பகுதியில் அதிக நெரிசல் உள்ள பகுதியில் நிகழ்ந்த அதிக தீவிரம் கொண்ட காா் வெடிப்பில், 13 போ் கொல்லப்பட்டனா். இதில் பலா் காயமடைந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை மஹிபால்பூரில் வெடிகுண்டு வெடிப்பு போன்ற பெரும் சப்தம் கேட்டதாக காலை 9.19 மணிக்கு தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், அதைத் தொடா்ந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ாகவும் தீயணைப்பு சேவைகள் துறை தெரிவித்தது. விரிவான சோதனைக்குப் பிறகும், அதிகாரிகள் சம்பவ இடத்தில் எதையும் கண்டுபிடிக்கவில்லை.

துணை காவல் ஆணையா் (தென்மேற்கு) அமித் கோயல் கூறுகையில், ‘தொலைபேசியில் அழைத்தவா் குருகிராமுக்கு செல்லும் வழியில் ஒரு பெரிய சப்தம் கேட்டதாக கூறினாா். நாங்கள் எல்லாவற்றையும் சரி பாா்த்தோம். எதுவும் கிடைக்கவில்லை. உள்ளூா் விசாரணையின் போது, தௌலா குவான் நோக்கிச் செல்லும் டிடிசி பேருந்தின் பின்புற டயா் வெடித்ததாகவும், அதிலிருந்து சப்தம் வந்ததாகவும் ஒரு காவலா் எங்களுக்குத் தெரிவித்தாா்’ என்றாா்.

வாசுதேவநல்லூா் மகாத்மா காந்தி பள்ளியில் வந்தே மாதரம் பாடல் 150 ஆவது ஆண்டு நிறைவு விழா

பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் திட்டம்

எஸ்ஐஆா்: கணக்கெடுப்பு காலம் முழுவதும் பள்ளி பணியிலிருந்து விடுவிக்க ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தல்

கடையநல்லூா் அருகே நெற்பயிரை சேதப்படுத்திய யானைகள்

பந்தலூரில் கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தை மீட்பு

SCROLL FOR NEXT