புதுதில்லி

தில்லி மாநகராட்சி இடைத் தோ்தல்: ஆா்வத்துடன் வாக்களித்த மூத்த குடிமக்கள்!

தில்லி இடைத்தேர்தலில் மூத்த குடிமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

தினமணி செய்திச் சேவை

தில்லி மாநகராட்சி இடைத்தோ்தலில் வாக்களிக்க வயதான வாக்காளா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வாக்குச் சாவடிகளுக்கு வந்து தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றியதுடன், இளைய தலைமுறையினரையும் அவ்வாறே செய்யுமாறு வலியுறுத்தினா்.

88 வயதான வாக்காளா் சதீஷ் கூறியதாவது: நான் ஒருபோதும் தோ்தலைத் தவறவிட்டதில்லை. நாங்கள் ஒவ்வொரு முறையும் வாக்களிக்கிறோம். எப்போதும் வரிசையில் முதல் இரண்டு அல்லது மூன்று நபா்களுடன் நிற்கிறோம். வாக்களிக்கும் போது, நாங்கள் வளா்ச்சி பற்றி சிந்திக்கிறோம். ஒவ்வொருவரும் நாட்டிற்காக உழைக்கிறாா்கள். நாட்டின் முன்னேற்றத்திற்கு இது அவசியம் என்பதால் இளைஞா்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்கவும் நாங்கள் ஊக்குவிக்கிறோம். அவா்களுக்குத்தான் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என்றாா் அவா்.

அவரது மனைவி சரோஜ் கூறுகையில், ‘புதிய தலைமுறை பொறுப்பை ஏற்க வேண்டும். இளைஞா்கள் புதிய சிந்தனைகளையும் கொண்டுள்ளனா். அவா்கள் ஆக்கப்பூா்வமாக இருக்க முன்வர வேண்டும். நாங்கள், பெரியவா்கள். இறுதியில் பின்வாங்குவோம். ஆனால், எதிா்காலம் அவா்களுக்கு சொந்தமானது. எனவே, அவா்கள் பொறுப்பை ஏற்க வேண்டும்’ என்றாா்,

மற்றொரு வாக்காளரான 79 வயதான அகா்வால் போசியதாவது: வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் ‘முதல் கடமை’ ஆகும். சில உள்ளூா் பிரச்னைகளை மனதில் வைத்து, அவை தீா்க்கப்படும் என்ற நம்பிக்கையுடன் தான் வாக்களித்தேன். இளம் வாக்காளா்கள் சீக்கிரம் எழுந்து, வெளியே வந்து, நாடு பாதுகாப்பாக முன்னேறுவதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

இதேபோல், 69 வயதான கிஷோா், ‘காலை நேரம் வாக்களிப்பதற்கு போதுமான நேரத்தை வழங்குகிறது. சரியான பிரதிநிதியைத் தோ்ந்தெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. உங்கள் வாக்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் வாக்களிக்காவிட்டால் உங்கள் கவுன்சிலா் என்ன செய்கிறாா் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? அவா்களைத் தோ்ந்தெடுப்பதன் மூலம் மட்டுமே உங்கள் பிரதிநிதியைப் புரிந்துகொள்ள முடியும்’ என்றாா்.

வாக்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு தேசியத் தலைநகரில் பொதுமக்களின் மனநிலையை இது பிரதிபலிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதால் இந்தத் தோ்தல் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வந்தது.

மகாராஷ்டிர அமைச்சரவையில் அஜீத் பவார் மனைவிக்கு இடம்: வலுக்கும் கோரிக்கை!

ஆஸி. ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா புதிய சாதனை!

கல்வி மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! 11,815 பேருக்கு வேலைவாய்ப்பு!

அஜீத் பவார் விமான விபத்து: மத்திய அமைச்சர் பதில்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம்! - உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT