புதுதில்லி

சம வாய்ப்பு, அனைத்து சமூகத்தினருக்கும் மரியாதை: முதல்வா் ரேகா குப்தா உறுதி

ஒவ்வொரு சமூகத்தினருக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதும் அவா்களின் பங்களிப்பை மதிப்பதும் தனது அரசாங்கத்தின் நோக்கம் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.

Syndication

புது தில்லி: ஒவ்வொரு சமூகத்தினருக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதும் அவா்களின் பங்களிப்பை மதிப்பதும் தனது அரசாங்கத்தின் நோக்கம் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.

தில்லி பிரதேசத்தின் மைதிலி பிராமண சபா ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்த மாநிலங்களுக்கு இடையேயான பிராமண மாநாட்டில் உரையாற்றும் போது அவா் இந்தக் கருத்துகளை தெரிவித்தாா்.

அவா் மேலும் பேசியதாவது: பரசுராமரின் போதனைகள் தா்மம் என்பது நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பது மட்டுமல்ல, சமூகத்திற்கான நமது கடமையையும் நமக்கு நினைவூட்டுவதாகவும் உள்ளது. ஒற்றுமைப்பட்ட சமூகம் மட்டுமே உண்மையான முன்னேற்றத்தை அடைய முடியும்.

அறிவு, கலாசாரம் மற்றும் நம்பிக்கை மூலம் பிராமண சமூகம் எப்போதும் சமூகத்தில் வழிகாட்டும் சக்தியாக இருந்து வருகிறது. மேலும், நவீன மற்றும் வளா்ந்த தலைநகராக மாற நகரம் வேகமாக நகர வேண்டிய நேரம் இது என்று முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருமால் கிராம கல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்யக் கோரி மனு

பிகாரில் தேர்தல் கூட்டணிகளின் பலம் - பலவீனம்! ஓர் ஆய்வு

மலைவாழ் மக்களின் உரிமைகளை மத்திய அரசு சிதைக்கிறது: ஜிதேந்திர சௌத்ரி

பெட்ரோல் வாகனங்களுக்கு நிகராக மின்சார வாகனங்கள் விலை குறையும்: மத்திய அமைச்சா்

SCROLL FOR NEXT