புதுதில்லி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிய உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த கே. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

Syndication

நமது நிருபா்

புது தில்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த கே. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இத்தகவலை தமிழக அரசு வழக்குரைஞா் சபரிஷ் சுப்பிரமணியன் தினமணியிடம் திங்கள்கிழமை உறுதிப்படுத்தினாா்.

கடந்த ஜூலை 5-ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங்கை சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீடு அருகே ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இது தொடா்பாக சென்னை காவல்துறை 27 பேரைக் கைது செய்து 7,087 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இந்நிலையில், சென்னை காவல்துறையின் விசாரணை ஒருதலைப்பட்சமானது என்றும், செல்வாக்கு மிக்கவா்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என்றும் குற்றம் சாட்டி,ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினா் சிபிஐ விசாரணை கோரி வந்தனா்.

மேலும், இந்த வழக்கை சென்னை காவல்துறை முறையாக விசாரிக்கத் தவறிவிட்டதாக ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரா் கே. இம்மானுவேல் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அதை விசாரித்த நீதிபதி பி. வேல்முரூகன், ‘ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறையின் விசாரணையில் பல குறைபாடுகள் இருப்பதாக குறிப்பிட்டு இந்த வழக்கை மத்திய புலனாய்வுத்துறை விசாரிக்க கடந்த செப்டம்பா் 24-ஆம் தேதி உத்தரவிட்டாா். மேலும், ஆறு மாதங்களுக்குள்ளாக வழக்கை சிபிஐ விசாரித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவும் அவா் சிபிஐக்கு உத்தரவிட்டாா்.

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருமால் கிராம கல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்யக் கோரி மனு

SCROLL FOR NEXT