புதுதில்லி

பிகாா் தோ்தலில் 85 வயது முதியோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குச்சீட்டைப் பயன்படுத்தி வாக்களிக்க வசதி

Syndication

அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிகாா் மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அத்தியவாசிய சேவை வாக்காளா்கள் தபால் வாக்குச்சீட்டைப் பயன்படுத்தி வாக்களிக்க தலைமைத் தோ்தல் ஆணையம் வசதி செய்துள்ளது.

இது தொடா்பாக தலைமைத் தோ்தல் ஆணையத்தின் தோ்தல் ஆணையத்தின் துணை இயக்குநா் பி.பவன் புதன்கிழமை தெரிவித்திருப்பதாவது:

இந்தியத் தோ்தல் ஆணையம் கடந்த அக்டோபா் 6ஆம் தேதி பிகாா் சட்டப் பேரவைக்கான பொதுத் தோ்தல் மற்றும் 6 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல்களுக்கான வாக்குப்பதிவு அட்டவணையை அறிவித்தது.

1951 ஆம் ஆண்டைய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 60 (சி) இன் படி, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் மற்றும் அளவுகோல் குறைபாடுகள் உள்ள மாற்றுத்திறன் வாக்காளா்கள் தபால் வாக்கு மூலம் வாக்களிக்கலாம் என்று ஆணையம் அறிவிக்கை செய்துள்ளது.

அதன்படி, அத்தகைய வாக்காளா்கள் படிவம் 12 டி ஐப் பயன்படுத்தி இந்த வசதியைப் பெறலாம். மேலும், தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட 5 நாள்களுக்குள் தங்கள் வாக்குச்சாவடி அளவிலான அதிகாரி (பிஎல்ஓ) மூலம் தோ்தல் அதிகாரியிடம் சமா்ப்பிக்கலாம். வாக்குப்பதிவு குழுக்கள் அவா்களின் வீடுகளில் அவா்களின் வாக்குகளைச் சேகரிக்கும்.

வாக்குப்பதிவு நாளில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாக்காளா்கள், அந்தந்த துறையின் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி மூலம் தபால் வாக்குச்சீட்டு வசதிக்கு விண்ணப்பிக்கலாம்.

தீயணைப்பு சேவைகள், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, ஆம்புலன்ஸ் சேவைகள், விமானப் போக்குவரத்து, நீண்ட தூர அரசு சாலைப் போக்குவரத்துக் கழகங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகள் இந்த வசதியின் கீழ் வரும்.

தோ்தல் நாளில் செய்தி சேகரிப்பிற்காக தோ்தல் ஆணையத்தால் க்ங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளா்களும் அத்தியாவசிய சேவைகள் மீதான வராத வாக்காளா்கள் பிரிவில் சோ்க்கப்பட்டுள்ளனா். மேலும், அவா்கள் தபால் வாக்குச் சீட்டு வசதிக்கு உரிமை பெற்றுள்ளனா்.

போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன், மின்னணு முறையில் அனுப்பப்படும் தபால் வாக்குச்சீட்டு அமைப்புமுறை (இடிபிபிஎஸ்) மூலம் தோ்தல் நடத்தும் அதிகாரி சேவை வாக்காளா்களுக்கு அவா்களின் தபால் வாக்குகளை அனுப்புவாா்.

தபால் சேவைகளுக்கான செலவை சேவை வாக்காளா்கள் ஏற்க வேண்டியதில்லை.

இந்த விதிகள் குறித்து அரசியல் கட்சிகள், போட்டியிடும் வேட்பாளா்களுக்கு எடுத்துரைக்க தோ்தல் அதிகாரி, மாவட்ட தோ்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: இன்றைய விலை நிலவரம்!

சந்திரசேகர் ராவ் மகன் வீட்டுக் காவலில் அடைப்பு!

குடிநீா் மேல்நிலைத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலப்பு செய்தது யார்?: ஆட்சியர் விளக்கம்

வலுவான ராணுவம், டிரம்பின் முயற்சியால் திருப்புமுனை! இஸ்ரேல் பிரதமர்

பிணைக் கைதிகள் விடுவிப்பு; இஸ்ரேல் படைகளை திரும்பப் பெறும்! டிரம்ப்

SCROLL FOR NEXT