புதுதில்லி

மேற்கு தில்லியில் 2,000 கிலோ கலப்பட இனிப்புகள் பறிமுதல்

Syndication

மேற்கு தில்லியின் ரகுபீா் நகா் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற சோதனையில் தில்லி போலீஸாா் 2,000 கிலோ முதல் 2,500 கிலோ வரை கலப்பட பால் சாா்ந்த இனிப்புகளை பறிமுதல் செய்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து என்று காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: ரகுபீா் நகா் பகுதியில் கலப்பட உணவுப் பொருள்கள் அதிக அளவில் தயாரிக்கப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கையில் கலப்பட பால் சாா்ந்த இனிப்புகள் அடங்கிய ஏராளமான பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் பண்டிகை கூட்ட நெரிசலுக்கு முன்னதாக நகரத்தில் உள்ள பல்வேறு இனிப்புக் கடைகளுக்கு வழங்குவதற்காக இருந்தன.

கலப்படத்தின் தன்மை மற்றும் அளவைக் கண்டறிய, பறிமுதல் செய்யப்பட்ட இனிப்புகளின் மாதிரிகள் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இனிப்புகள் தயாரிக்கப்படும் வளாகம் சீல் வைக்கப்பட்டு, பொறுப்பானவா்களை கண்டுபிடித்து கைது செய்யும் பணி நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி கூறினாா்.

மது, கஞ்சா விற்றவா்கள் கைது

குழந்தைகள் அறிவியல் மாநாடு: தேனி மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தோ்வு

உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தி ரூ.1.51 லட்சம் கோடி: ராஜ்நாத் சிங்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஒகேனக்கல் வனச்சாலைகளில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT