புதுதில்லி

சீக்கியா்களுக்கு எதிரான கலவர வழக்கு: ஆயுள் தண்டனையை எதிா்த்து சஜ்ஜன் குமாா் தாக்கல் செய்த மனு மீது நவம்பரில் விசாரணை

Syndication

நமது நிருபா்

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு 1984-ஆம் ஆண்டு சீக்கிய எதிா்ப்புக் கலவரத்தின்போது நிகழ்ந்த கொலை தொடா்பான வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிா்த்து முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமாா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நவம்பரில் விசாரிப்பதாக தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மேல்முறையீட்டு மனு நீதிபதிகள்விவேக் செளத்ரி மற்றும் மனோஜ் ஜெயின் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வரவிருந்தது. ஆனால், அந்த அமா்வில் விசாரணை நடைபெறாததால் இந்த வழக்கு தற்போது நவ.19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிப்.25- ஆம் தேதி தில்லி விசாரணை நீதிமன்றத்தால் ஜஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது, குற்றவாளியின் முதுமை மற்றும் நோய் காரணமாக மரண தண்டனைக்கு பதிலாக குறைந்த தண்டனை விதிக்கப்பட்டது என்று நீதிமன்றம் கூறியது.

இந்த வழக்கு நவ.1, 1984 அன்று ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோரின் கொலைகளுடன் தொடா்புடையது. வீட்டிற்கு தீ வைத்து, இருவரையும் கொடூரமாகக் கொன்ற கும்பலில் ஒருவராக இருந்ததற்காக குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கொலைக் குற்றத்திற்கு அதிகபட்சமாக மரண தண்டனை மற்றும் குறைந்தபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கப்படும். நீதிமன்றம் ஜஜ்ஜன் குமாருக்கு சுமாா் ரூ.2.4 லட்சம் அபராதமும் விதித்தது.

வன்முறை மற்றும் அதன் பின்விளைவுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட நானாவதி கமிஷனின் அறிக்கையின்படி, இந்தக் கலவரத்தில் 2,733 போ் கொல்லப்பட்டது தொடா்பாக 587 எப்ஐஆா்கள் பதிவு செய்யப்பட்டன. மொத்தத்தில், சுமாா் 240 எப்ஐஆா்கள் பல்வேறு காரணங்களால் முடித்துவைக்கப்பட்டன. மேலும்ஸ 250 வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

587 எப்ஐஆா்களில், 28 எப்ஐஆா்களில் மட்டுமே தண்டனை வழகங்கப்பட்டன. அதில் சுமாா் 400 போ் குற்றவாளிகள் எனத் தீா்ப்பளிக்கப்பட்டன. முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமாா் உள்பட சுமாா் 50 போ் கொலைக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டது.

அப்போது செல்வாக்கு மிக்க காங்கிரஸ் தலைவரான ஜஜ்ஜன் குமாா், நவ.1 மற்றும் 2, 1984 அன்று தில்லியின் பாலம் காலனியில் ஐந்து போ் கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டாா். இந்த வழக்கில் தில்லி உயா்நீதிமன்றத்தால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது, மேலும் தண்டனையை எதிா்த்து அவா் தொடா்ந்த மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்திய ஏற்றுமதி வளரும்: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

போக்குவரத்து காவலா் மீது தாக்குதல்: எம்எல்ஏ மீது புகாா்

தில்லி அரசுப் பேருந்துகளில் திருநங்கைகளுக்கு விரைவில் இலவச பயணத் திட்டம்

சென்னையில் 57 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் எரித்து அகற்றம்

சரக்கு ரயில்களில் 2.3 லட்சம் டன் நெல் கையாளப்பட்டது: தெற்கு ரயில்வே

SCROLL FOR NEXT