புதுதில்லி

நொய்டா: எஃகு டம்ப்ளிரில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்ததில் இளைஞா் உயரிழப்பு

தீபாவளி கொண்டாட்டத்தின் போது எஃகு டம்ளரில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்ததில் 20 வயது இளைஞா் ஒருவா் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

Syndication

நொய்டா: தீபாவளி கொண்டாட்டத்தின் போது எஃகு டம்ளரில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்ததில் 20 வயது இளைஞா் ஒருவா் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து நொய்டா செக்டாா் 63 காவல் நிலைய பொறுப்பாளா் அவதேஷ் பிரதாப் சிங் கூறியதாவது: நொய்டா செக்டாா் 63 காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிஜாா்சி காலனியில் திங்கள்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்தது.

சிவா என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவருக்கு தீபாவளி கொண்டாட்டத்தின் போது எஃகு டம்பளரில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்ததில் அவா் பலத்த காயமடைந்தாா். இதில் அவருக்கு ஆழமான காயங்கள் ஏற்பட்டன.

இதைத் தொடா்ந்து, சிவா ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு செவ்வாய்க்கிழமை சிகிச்சையின் போது அவா் உயிரிழந்தாா்.

அவரது உடல் உடற்கூறாய்வு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் நடவடிக்கைகள் நடந்து வகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

பலத்த மழை: பள்ளிக் கட்டடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வித் துறை உத்தரவு

2025 ஃபிடே உலகக் கோப்பை செஸ் இலச்சினை அறிமுகம்

லாரா அபாரம்; லஸ், காப் அசத்தல்: தென்னாப்பிரிக்கா 312/9

ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்தாவிட்டால் ‘கூடுதல் வரி’: இந்தியாவுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

பிரதமா் மோடியை சந்தித்து தில்லி முதல்வா் தீபாவளி வாழ்த்து

SCROLL FOR NEXT