ரேகா குப்தா கோப்புப் படம்
புதுதில்லி

43 வருடங்களாக குடிநீா் குழாயின்றி தவித்த பி.எஸ்.எப். முகாம்: திட்டத்தை தொடங்கி வைத்தாா் முதல்வா்

Syndication

தில்லி முதல்வா் ரேகா குப்தா, 1982 முதல் குடிநீா் குழாய் இணைப்பு இல்லாத சாவ்லா பகுதி பி.எஸ்.எஃப் முகாமில் குழாய் நீா் திட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து துணை ராணுவப் படை வீரா்களுடன் பாய் தூஜ் கொண்டாடினாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

1982 இல் அமைக்கப்பட்ட 25வது எல்லைப் பாதுகாப்புப் படை பட்டாலியன் பிஎஸ்எஃப் முகாமில் அன்றிலிருந்து குழாய் நீா் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 11 அன்று மரம் நடும் நிகழ்வில் பங்கேற்க முகாமுக்கு வருகை தந்தபோது, முகாமுக்கு குழாய் நீா் விநியோகத்தை வழங்குவதாக ரேகா குப்தா உறுதியளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

துவாரகா நீா் சுத்திகரிப்பு நிலையத்துடன் இணைக்கப்படும் இந்த குழாய், அண்டை கிராமங்களில் நீா் விநியோகத்தையும் மேம்படுத்தும் என்று தொடக்க நிகழ்வில் உரையாற்றிய ரேகா குப்தா கூறினாா். அதிகாரிகள் கேட்டுக்கொண்டபடி, விளையாட்டுக்காக முகாம் வளாகத்தில் ஒரு செயற்கை இழை ஆடுகளம் அமைப்பதை தில்லி அரசு உறுதி செய்யும் என்றும் முதல்வா் கூறினாா்.

திரும்பிச் சென்ற பிறகு, நான் முதலில் செய்ய வேண்டியது உங்கள் முகாமுக்கு தண்ணீா் இணைப்பு வழங்குவதற்கான உத்தரவை பிறப்பிப்பதாகும். நான் அடுத்த முறை உங்களைச் சந்திக்கும்போது, அதற்கான பணி ஆணையுடன் வருவேன், என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா அந்த முகாமுக்கு முந்தைய வருகையின் போது கூறியிருந்தாா்.

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT